பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-18 18. மீண்டும் பங்காளி உறவு கோட்டாத்தார் வந்த பிறகு பல பெரியோர்களின் அன்புக்குப் பாத்திரமானேன். மாமன் முறையிலுள்ள பலர் என்னைக் கொம்பு காத்தான்’ என்று அழைத்துப் பரிகசித்தனர். இதன் பொருள் எனக்கு விளங்கவில்லை. ஒரு பெரியவர் காரணத்தை விளக்கினார்: என் தந்தையார் பயந்த சுபாவம் உள்ளவர் என்றும், ஆயினும் சில சிறு குறும்புகளைச் செய்வார் என்றும், ஒருசமயம் ஒரு துக்க நிகழ்ச்சிக்குப் பறை மேளத்துடன் வந்திருந்த ஊது கொம்பை எடுத்து ஊதிவிட்டார் என்றும், அது முதல் அவரைக் கொம்பு காத்தான்’ என்று மாமன் முறையினர் கிண்டல் செய்வ துண்டு என்றும் விளக்கினர். என் தந்தையார் இறந்த பின் பல ஆண்டுகளாக இப்பெயர் வழக்காற்றில் இல்லை யென்றும், நான் வந்த பிறகு என் தந்தையாருக்கு அமைந்த பட்டப் பெயர் வாரிசாக எனக்குச் சூட்டி மகிழ்கின்றனர் என்றும் அறிந்து கொண்டேன். என் அன்னையார் எனக்கு எப்படியும் உயர்கல்வி பெறுவதற்கு வசதிகள் செய்து தரவேண்டும் என இராப் பகலாக எண்ணிக் கொண்டிருந்தார். காரணம், என் தந்தையார் இறந்த பிறகு பங்காளிகளால் சொல்லொணாத் துன்பங்களை அநுபவித்தார். ஒரு சமயம் என் அன்னையார் நான் பெரகம்பியிலிருந்தபோது என்னைப்பார்க்க வந்திருந்த பொழுது எங்கள் வீட்டுக் கதவைக் கள்ளச் சாவி’ போட்டுத் திறந்து எல்லாச் சிறு பாத்திரங்களையும் ஒரு பித்தளைக் கொப்பரையில் அடக்கி ஒரு பெரிய தாம்பாளத்தால் மூடி கயிற்றால் பலமாகக் கட்டி வீட்டருகிலுள்ள உறைக் கிணற்றில் போட்டு விட்டார்களாம். என் அன்னையார் ஊர் திரும்பிய பிறகு நிகழ்ச்சியை அறிந்து திடுக்கிட்டுப்