பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்டும் பங்காளி உறவு 137 போனாராம். நான்கு ஐந்து வீட்டுக்கப்பாலுள்ள இரகுபதி ரெட்டியாரைக் கொண்டு பல இடங்களில் தேடினார்களாம். சில தினங்களில் துப்புத் துலங்கவே, உறைக்கிணற்றிலிருந்து பாத்திரங்களை எடுத்தார்களாம். இந்த வரலாற்றை (1) இரகுபதி ரெட்டியாரே நான் கோட்டாத்துார் வந்ததும் தெரிவித்தார். இது போன்ற பல நிகழ்ச்சிகளால் என் அன்னையார் தொல்லைப்பட்டதையும் கூறினார். அவை யெல்லாம் இப்போது நினைவில் இல்லை. வேறு சில வம்புக் கிழுத்த சிவில் வழக்குகளாலும் சில ஆண்டுகள் மாவட்ட நீதிமன்றத்திற்கும் போக வேண்டியிருந்தது என்றும் தெரிவித்தார். அந்தக் காலத்தில் ஏழைக் கட்சிக்காரர்களை சில வழக்கறிஞர்கள் (பிராமணர்கள்) அரிசனங்கள்போல் நடத்தினர். நானே துறையூரில் பயின்றபோது இக்காட்சி களை நேரில் கண்டிருக்கின்றேன். இதனால் என் அன்னை யார் என்னை வழக்கறிஞராகச் செய்ய வேண்டும் என்று மனப்பால் குடித்திருக்க வேண்டும் என்பதை ஊகித்து அறிகின்றேன். பலரிடம் இப்படித் தெரிவித்ததாகவும் அப்போதே சிலர் மூலம் அறிந்தேன். ஆனால் அந்தச் சிறு வயதில் எனக்கு ஒன்றும் சரியாக விளங்கவில்லை. பங்காளி வீட்டுத் தொந்தரவு தாங்கமுடியாமல் அந்த வீட்டாருக்கும் எங்கட்கும் முறப்பாடு இருந்தது சிறுவர் களாகிய நாங்கள் பேசுவோம்; விளையாடுவோம். ஆனால் அவர்கள் வீட்டுத் தின்பண்டங்களைக் கூட உண்ணக்கூடாது என்பது என் அன்னை யாரின் கட்டளை. பல்வேறு தொந்தரவு களைக் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் என் குடும்பத்திற்கு ஒரே பிள்ளையாகிய என்னை நஞ்சூட்டிக் கொன்றாலும் கொன்று விடுவார்கள் என்று என் அன்னை நினைத்தார் களோ என்று இப்போது ஊகிக்கின்றேன். பல்லாண்டுகளாக இப்படி விரோதம் தொடர்ந்து இருந்து கொண்டு இருந்தது.