பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 நினைவுக் குமிழிகள்-1 சிறுவர்களாகிய நாங்கள் வளர வளர இந்த விரோதம் கரைந்து கொண்டே போயிருக்க வேண்டும். இந்நிலையில் என் பங்காளி வீட்டுப்பெண்-எனக்குத் தமக்கை முறை - திருமணத்திற்கு ஏற்றவளாகி விட்டாள். சில ஆண்டுகட்கு முன்னால் அவளுடைய தாயும் இறந்து விட்டாள். அதற்குள் இரு குடும்பமும் ஒற்றுமையாகி விடவேண்டும் என்ற எண்ணம் இருபாலாரிடமும் ஒரே சமயத்தில் உதித்திருக்க வேண்டும். இது தெய்வத்தின் திருவுள்ளமுமாக இருந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றேன். திருமணம் நடைபெறும் போது ஒரே வீட்டில் ஒரு பாதியில் குடியிருக்கும் நாங்கள் திருமணத்தில் கலந்து கொள்ளாதிருந்தால் நன்றாக இராது என்று வேறு சில பெரியோர்களும் கருதி ஒற்றுமைக்கு வழிகோலி இருக்க வேண்டும். ஊரிலுள்ள எல்லாக் கோயிலுக்கும் இரு குடும்பமும் சென்று எங்கள் முறப்பாடு' தீர்ந்தது என்று சொல்லி வேண்டிக் கொண்டது இப்போது நினைவிற்கு வருகின்றது. என் அன்னையார் தொல்லை பொறுக்க முடியாத நிலையில் ஊர்த் தெய்வங்களிடம் முறை யிட்டு இந்த முறப்பாட்டை ஏற்படுத்தியிருக்க வேண்டும். என் தமக்கையாரின் திருமணத்திற்கு முன் இந்த முறப்பாடு: முறிந்ததை அக்கம்பக்கத்தார் உட்படப் பல பெரியோர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். கோவில் வழிபாடு : எங்கட்கு எங்கள் ஊரிலோ வேறிடங்களிலோ யாதொரு உதவியும் செய்வாரிலர். பிறந்தது முதல் இன்று வரை இதே நிலைதான். 'திக்கற்ற வருக்குத் தெய்வமே துணை' என்பது முதுமொழியன்றோ? இந்த முதுமொழியில் அழுத்தமான நம்பிக்கையுடையவர்கள் என் அன்னையார். இதனால் கோட்டாத்துார் வந்த பிறகு அவர்கட்குத் தெரிந்த பல கோயில்கட்கு என்னை இட்டுச் செல்வார். உள்ளுரிலுள்ள எல்லாக் கோயில்கட்கும் நான் அவர்களுடன் போவேன், அடிக்கடி சோதிடம் பார்ப்பார்