பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்டும் பங்காளி உறவு 139 மந்திரவாதிகளிடம் சென்று என்னைப் பற்றி ஆலோசிப்பார். ஊரிலுள்ள வள்ளுவப் பண்டாரம் சோதிடத்தில் வல்லவர். அவரை இட்டு வந்து என் சாதகக் குறிப்பை ஆராய்வார். அவர் சொல்லுவதற்கேற்ப நவக்கிாகங்களில் சிலவற்றிற்கு விளக்குப் போடுவார். என்னையும் ஈசுவரன் கோயிலுக்கு இட்டுச் சென்று அங்குள்ள நவக்கிரகங்களை ஒன்பது முறை சுற்றி வரச் செய்வார். உள்ளுரிலுள்ள எந்தக் கோயில்களை யும் விட்டு வைப்பதில்லை. எல்லாக் கோயில்களிலும் அடிக்கடி வழிபாடுகள் நடக்கும். மேலும், சேணியர் தெருவிலுள்ள மந்திரவாதி ஒருவரிடம் இட்டுச் சென்று மந்திரத்தாலான வெள்ளித் தாயத்து ஒன்றை இடுப்பில் கட்டச் செய்ததும் நினைவிற்கு வருகின்றது. இன்னும், பெரகம்பிக்கு ஏதாவது திருவிழாவுக்குப் போகும்போது, அவ்வூ ல் குலாலயரின் ஒருவர் வீடு சென்று உடுக்கையடிக்கச் செய்து சுவாமி குறை ஏதாவது இருக்கின்றதா என்று சோதிப்பார். உடுக்கை யடிப்போர் இராகத்துடன் பாட்டுப் பாடிக் கொண்டு அடிக்கும்போது மிக உருக்கமாகத் தோற்றும். அவர் பாட்டும் உடுக்கையொலியும் கேட்போரிடையேயும்.உணர்ச்சி பொங்கி வழியச் செய்யும். இந்த நிகழ்ச்சி இன்றும் என் மனத்தில் பசுமையாகவே உள்ளது. மேலும், சிலசமயம் பெரகம்பியில் உள்ள கோயில்கட்கும் இட்டுச் செல்வார். பெரகம்பிக்கு நடந்தே செல்வோம். அந்தச் சிறுவயதில் ஐந்தாறு கல் தொலைவு நடப்பது சிரம மாகத்தான் இருக்கும். எப்படியோ உற்சாகப்படுத்தி என்னை நடராஜா சர்வீசிலேயே இட்டுச் சென்று விடுவார். பெரகம்பியில் என் அன்னை வழியில் சொந்தமான அத்தை வீடு உண்டு. அங்குதான் தங்குவோம். ஊருக்கு மேற்கிலுள்ள பிடாரிக்கோயில், இராமசாமிக் கோயிலில் முதலில் வழிபாடு