பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 நினைவுக் குமிழிகள்-1 நடக்கும். நடுவீதியிலிருக்கும் என் அம்மான் வீட்டி லுள்ளோருக்கு எங்கள் நடமாட்டம் தெரியாதவாறு வடக்கு வீதி வழியாகவே நடந்து செல்வோம். பிறகு கீழ்த்திசையில் சுமார் ஒரு கல் தொலைவிலுள்ள பிடாரியம்மனின் தங்கை வதியும் கோயிலுக்கும் இட்டுச் சென்று வழிபாடுகளை நடத்துவார். எனக்கு என் அம்மானைப் பார்க்க வேண்டும் என்ற நப்பாசை இருக்கும். என்னைக் கடிந்தே அந்த ஆசை எழாமல் அடக்கி விடுவார். ஒன்றிரண்டு நாட்களில் கோட்டாத்துரர் திரும்புவோம். ஒருசமயம் கோட்டாத்துார் வந்த சில ஆண்டுகளுக்குள் பெரகம்பியில் ஊரணை’ என்ற திருவிழா நடைபெற்றது. தினந்தோறும் ஒவ்வொரு கோயிலாக ஊர்ப் பெருமக்கள் திரண்டு பொங்கல் வைத்து வழிபாடுகள் நடத்துவர். இந்த விழாவிற்கு வருமாறு என் அத்தை அழைப்பு விடுத்தார்கள். நானும் என் அன்னையும் சென்றிருந்தோம். வடகிழக்கே யுள்ள ஆற்றுக்குப் பொங்கலிட்டனர். ஒருநாள் சமுக்காள் விரிப்பு எடுத்துச் சென்று ஒரு மரத்தடியில் தங்கியிருந்தோம். அப்பொழுது மிக நெருக்கமான மற்றோர் மரத்தடியில் என் அம்மானின் குடும்பமும் தங்கியிருந்தது. என் அம்மானின் துணைவியர்ர் அடிக்கடி கடைக்கண்ணால் எங்களைக் கவனித்தார். என் அம்மானோ சிவனே' என்று மரத்தடியில் கிடந்தார். எனக்கோ என் அம்மானிடம் செல்லவேண்டும் என்ற ஆசை இருந்தது. கடிந்தே என் ஆசையை அடக்கி விட்டார் என் அன்னையார். கோட்டாத்துர் வந்த சில ஆண்டுகளில் சொந்தப் பண்ணை வைக்கத் தொடங்கினார். என் அன்னையார் அதுகாறும் நஞ்சை நிலத்தை ஒருவரிடம் குத்தகைக்கு விட்டிருந்தார். புன்செய் சாகுபடி மட்டிலும் நேர்பார்வை யில் இருந்தது. இதனால் ஆள், மாடுகள் வசதிகள் இருந்தன.