பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்டும் பங்காளி உறவு 141 ஒருசமயம் இரவல் வண்டி வாங்கிச் சொந்த மாடுகளைப் பூட்டி சொந்த ஆளைக் கொண்டு வண்டியோட்டச் செய்து புத்தனாம்புட்டி காமாட்சியம்மன் கோயிலுக்கு இட்டுச் சென்றார். புத்தனாம்பட்டி கோட்டாத்துாரிலிருந்து மூன்று கல் தொலைவிலுள்ளது. இங்ஙனமே, மற்றொரு சமயம் சுமார் பத்துக்கல் தொலைவிலுள்ள மாரம்ம ரெட்டி பாளையத்திற்கு வண்டியில் இட்டுச் சென்று அவ்வூர்க் கோயிலில் வழிபாடு நிகழ்த்தச் செய்தார். தாம் பிறந்த ஊராகிய பெரகம்பியிலிருந்து மூன்று கல் தொலைவுதான். தாம் தாயகத்திலிருந்த போது இந்த ஊர்த் தேவதைகளை யெல்லாம் வழிபட்ட பழக்கம்தான் என்னை இத்திசை களிலெல்லாம் இழுத்துச் சென்றது போலும். உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற அவா எழுந்த காலத்தில் என் வாழ்க்கையில் வேறொரு தொல்லை எழுந்தது. மாலை ஆறு மணிக்கு மேல் எனக்கு கண் தெரிவதில்லை. எல்லாச் சிறுவர்களுடன் சேர்ந்து இரவில் நிலவொளியில் விளையாட முடிவதில்லை. மாலைக் கண்’ என்று சொல்கிறார்களே அந்த நோயாக இருக்கலாம். விட்டமின்-ஏ குறைவால் ஏற்படுகின்ற நோய் இது. எனக்கும் என் தாயாருக்கும் இது பெருங்கவலை அளித்தது. விரைவில் கண்ணொளியில் முன்னேற்றம் கண்டால் பழநி முருகனுக்கு முடியெடுப்பதாக வேண்டிக் கொண்டோம். சுமார் ஓராண்டியில் இக்குறை நீங்கியது. என் அண்ணார் துணை யுடன் நானும் என் அன்னையாரும் பழநி சென்று முடியெடுத்து வழிபாடு நிகழ்த்தி ஊர் திரும்பினோம். அந்த நிகழ்ச்சியை நினைந்து மனத்தில் குமிழி எழும்போது, விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள்: மெய்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காவெனும் நாமங்கள்; முன்புசெய்த