பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம் மேன்மைப் படுவாய் மனமே!கேள் விண்ணின் இடிமுன் விழுந்தாலும், பான்மை தவறி கடுங்காதே, பயத்தால் ஏதும் பயனில்லை; யான்முன் உரைத்தேன் கோடிமுறை இன்னும் கோடி முறைசொல்வேன் ஆன்மா வான கணபதியின் அருளுண்டு அச்சம் இல்லையே." -பாரதியார் எம்பெருமான் ஏழுமலையான் கருணை வெள்ளம் கோத்து என்னைச் சூழ்வதால் இச்சிறியேனின் மாணவ வாழ்க்கை நினைவுக் குமிழிகள் - 1 என்ற தலைப்பில் இலக்கியமாகின்றது. இளமையில் வறுமைத் துன்பம் மிகப் பொல்லாதது. இதன் கொடுமையை வறியவன் இளமை போல் (கலி - 10), பொருளில்லான் இளமைபோல்' (கலி - 38) என்ற கலித்தொகையடிகளில் காணலாம். வேறொன்றினை விளக்க இது உவமையாக வத்துள்ள மையால் இதன் கொடுமை மேலும் தெளிவாகின்றது. மூன் றாண்டுப் பருவத்திலேயே தந்தையை இழந்தும் வறுமையால் வாடியும், நல்வழி காட்டத் தக்கார் இல்லாத தால் ஏக்கமுற்றும், அரக்கர் மனம் படைத்த சிலரால் துன்புற்றும் இளமைக்காலம் கழிந்தாலும், 'திக்கற்றவருக்குத் தெய்வமே துணை' என்ற முதுமொழிப்படி இறைவன் இருள் சூழ்ந்த வாழ்விலும் ஒளிக் கீற்றைக் காட்டி உய்வித்த 5. வி. நா. மாலை - 23