பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧ மையால் கல்லுரிப் படிப்பையும் தாண்ட முடிந்தது. இந்த என் வாழ்க்கையைப் பின் நோக்கிக் காணும்போது வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும் மிகச்சிறிய பருவத்தே வியந்து கினை நமது பெம்மான் என்(று) அடிகுறித்துப் பாடும்வகை புரிந்த பெருமானே! நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும் செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியகல் துணையே அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே’ என்ற வள்ளல் பெருமானின் திருவாக்கு நினைவில் எழுகின்றது. இளமையில் நெறியல்லா நெறியில் செல்லாமல் தடுத்து ஆட்கொண்டு கல்லூரிப் படிப்பினை நிறைவு செய்த கடவுளர்களின் திருவருளையும் கலைமகளின் கடைக்கண் நோக்கையும் நினைந்து போற்றுகின்றேன்; உடல் பூரிக் கின்றேன். இந்த எளியேனது மாணவ வாழ்க்கை என் போன்ற எண்ணற்ற எளியவர்.சட்கு ஏதாவது வழிகாட்டக் கூடுமானால், அதனை இறைவனின் திருவுளக் குறிப்பு என்று போற்றி மகிழ்வேன். தன் வரலாறு பற்றிய இலக்கியங்கள் தமிழில் மிகக் குறைவு, பதிப்பாசிரியர்களுள் சக்கரவர்த்திபோல் திகழ்ந்த தமிழ்த் தாத்தா அய்யர் வாளின் என் சரிதம் தமிழ் 6. திரு அருட்பா - ஆறாம் திரு முறை - அருள் விளக்க ւDՈ «ձ նս-7 ծ.