பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxi மொழியில் திகழும் சிறந்த தன் - வரலாற்று இலக்கியம். அண்மையில் வெளிவந்த கல்வித்தந்தை திரு நெ. து. சுந்தர வடிவேலு அவர்களின் நினைவு அலைகள் (மூன்று தொகுதிகள்) மற்றொரு சிறந்த தன் - வரலாற்று இலக்கிய மாகும். நாமக்கல் கவிஞரின் என் கதை"யும் நல்லதோர் இலக்கியமாகும். வேறு சிலவும் இருக்கலாம். அவை என் கவனத்திற்கு வரவில்லை. இளமையில் வறுமையால் வாடிய என்னை முதுமை யிலும் ஒய்வு ஊதியம் கூட இன்றி வறுமையால் வாட்டு கின்றான் இறைவன். இஃது என் நுகர்வினை போலும் (பிராரத்த கர்மம்) என்று எண்ணித் தாங்குகின்றேன். எதையும் தாங்கும் இதயத்தை அளித்த இறைவனின் திருவருளைச் சிந்தித்துப் போற்றுகின்றேன், இந்த நிலையில் தமிழக அரசு சிறிது நிதி உதவியது. முட்டுவழியில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லையாயினும், இறையருளால் நூல் வெளி வருகின்றது. இதனைத் தொடர்ந்து அவனருளால் நினைவுக் குமிழிகள்-2 (துறையூரில் 9 ஆண்டுகள் உயர் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வாழ்க்கை), கினைவுக் குமிழிகள்-3 (காரைக்குடியில் 10 ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியன் வாழ்க்கை), கினைவுக் குமிழிகள் 4 (திருப்பதியில் 17 ஆண்டுகள் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியன் துறைத்தலைவன் வாழ்க்கை, (கினைவுக் குமிழிகள் 5 (1977ல் ஒய்வு பெற்றபின் சென்னை வாழ்க்கை)போன்ற நான்கு நூல் கள் வெளிவர இருக்கின்றன. இந்த நூலை வெளியிட சிறிது நிதி உதவிய தமிழக அரசுக்குத் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் மூலம் என் நன்றியைப் புலப்படுத்துகின்றேன். இதனை அழகுற அச்சிட்டு உதவிய கவிஞர் நாரா. காச்சியப்பனுக்கும், (அதிபர், நாவல் ஆர்ட் பிரிண்டர்ஸ் சென்னை-14) ஒவியங்கள்