பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxii வரைந்தும், அச்சுக்கட்டைகள் தயாரித்தும் வண்ண அச்சுப் பணிகளை முற்றுவித்தும் உதவிய கலைமன்னர் P.N. ஆனந்தன் அவர்கட்கும், நூலைக் கவின் பெறக் கட்டமைத்துத் தந்த அருமைத்தம்பி V. திருகாவுக்கரசுக்கும் என் உளம் கலந்த நன்றி என்றும் உரியது. சிறியேனின் இந்த நூலுக்கு (முதற்பகுதி) அரியதோர் அணிந்துரையை அன்புடன் வழங்கியவர் என் கெழுதகை நண்பர் (மாணாக்கர்) டாக்டர் சிலம்பொலி சு, செல்லப்பன். புராண காலத்தில் சாந்தீபினி முனிவருக்குக் கண்ணன் மாணாக்கராக அமைந்ததுபோல் டாக்டர் சிலம்பொலியார் எனக்கு மாணாக்கராக வாய்த்தமை இறைவனின் திருவுள்ளக் குறிப்பாகும். என் நீண்ட வாழ்வில் கடமையைக் கண்ணெனப் போற்றி வாழ்பவன். இங்ஙனமே சிலம்பொலி யார் அவர் வாழ்வில் கடமையைக் கண்ணெனப் போற்றி வாழ்வார் என்ற கூறுகளை அவர் மாணாக்கராக இருந்த போது கண்டேன். அஃது உண்மையாயிற்று என்பது இப்போது தெளிவாயிற்று. ஒத்த மனமுடையவர்களாதலால் எங்கள் இருவர் தொடர்பும் இடையறாது நெருக்கமாக வளர்வதாயிற்று. சிலம்பொலியார் கணிதத்தில் முதல் மாணாக்கராகத் திகழ்ந்தார்; பின்னர் பணிபுரியும்போது தமிழன்னையால் ஆட்கொள்ளப்பட்டவர்; சிறியேன் அறிவியல்-கணிதம் இத்துறையில் முதல் மாணாக்கனாகி அத்துறைகளில் மிக்க ஆழங்கால் பட்டேன். நானும் பணிக்காலத்தில் தமிழன்னை 7. இதனை எடுத்துக்காட்டிற்காக மட்டிலும் கொள்க. நான் சாந்தீப முனிவனைப் போல் கற்றுத்துறை போய வித்தகன் அல்லன்: சிலம்பொலியும் கண்ணனைப் போன்ற அவதார புருஷனும் அல்லர். ஆனால் இருவரும் தமிழன்னையால் ஆட்கொள்ளப் பெற்றது மட்டிலும் ஒற்றுமை.