பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiii யில் ஆட்கொள்ளப்பட்டவன். அவர் தமிழ் வளர்ச்சித் துறை வில் பணியாற்றுகின்றார். சிறியேன் தமிழ் வளர்ச்சியில் பணியாற்றுகின்றேன். திருப்பதியில் தமிழ் வளர்வதற்குச் சிறியேன் முதற்காரணம்; சிலம்பொலியார் துணைக் காரணம்; நிமித்த காரணம் ஏழுமலையப்பன். பணியாற்றிக் கொண்டே இருவரும் பல பட்டங்கள் பெற்றோம். இருவரது டாக்டர் பட்டமும் ஏழுமலையானால் வழங்கப்பெற்றவை. இப்போதும் எங்கள் இருவரிடையேயும் சுறுசுறுப்பைக்' காணலாம். நான் பணி வாழ்க்கையில் துன்பப்பட்டதுபோல் அவரும் ஒரளவு துன்பப்பட்டதை யான் அறிவேன். ஆனால் இருவரையும் காத்தவன் இறைவன்: ஏழுமலையப்பன். அடியேன் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியனாக வாழ்க்கையைத் தொடங்கி, பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியனாக வளர்ந்து திருப்பதிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையைத் தோற்றுவித்து அதனை நாடே புகழும் படி வளர்த்து ஓய்வு பெற்ற பின்னும் தமிழன்னைக்குத் தொண்டாற்றி வருபவன். சிலம்பொலியாரும் கணித ஆசிரியன், உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியன், மாவட்டக் கழகக் கல்வியதிகாரி-இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின் தனி அலுவலர். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் என்று வளர்ந்து பணியாற்றுபவர். இங்ங்னமாக இருவரிடையேயும் பல ஒற்றுமைகள் உள்ளன. இத்தகைய, உள்ளம் ஒன்றிய, அருமை மனிதரின் அணிந்துரை பெற்றது இந்நூலின் பேறு; என் பேறும் ஆகும் என்றும் சொல்லலாம். அணிந்துரை அருளிய அன்பருக்கு உள்ளம் கலந்த நன்றியைப் புலப்படுத்துகின்றேன், என் அலுவல் பணியின் இறுதிக்கால 17ஆண்டு வாழ்க்கை யைத் (1960 ஆகஸ்டு முதல் 1977 அக்டோபர் முடிய) தமிழ் நடையாடாத ஆந்திரத்தில் கழியவும் தன் திருவடிவாரத் திலேயே தோற்றுவிக்கப்பெற்ற பல்கலைக் கழகத்தில் தமிழ்த்