பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

χκίν துறையைத் தன்னந் தனியனாக நின்று தோற்றுவிக்கச் செய் வித்தும், அதற்கு நல்லெண்ணமானியமாகச் (Good will grant) சிறுதொகையைத் தமிழக அரசினை வழங்கச் செய்வித்தும், துறையின் விரிவாக்கத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் ஒல்லும் வகைகளிலெல்லாம் நான் மேற் கொண்ட முயற்சியினை வெற்றியுடன் முற்றுவிக்கச் செய் வித்தும் என்னை நன்னெறிப்படுத்திய பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலாம்" ஏழுமலை அப்பனுக்கு இந்நூலையும் இதனைத் தொடர்ந்து வெளிவரும் நான்கு நூல்களையும் அவன் திருவடிகளில் பக்திப் படையலாக்கி மகிழ்கின்றேன். இந்த ஐந்துத் தொடர் நூல்களை எழுதத் துாண்டிய அவன் திருவுளக் குறிப்பிற்குத் "தலையல்லால் கைம்மாறு இலேனே' என் பணியின் வாழ்நாளில் முற்பகுதி தமிழை முறை யாகப் படித்தலிலும், நடுப்பகுதி அறிவியல் கல்வியியல் நூல் களை எழுதுவதிலும், கடைப்பகுதி தமிழ் நடையாடாத தேசத்தில் தமிழை நிலைநாட்டி அதனை நாடே புகழ வளர்ப்பதிலும் கழிந்தது. ஒய்வு பெற்றபின் முதுமைப் பருவத்தில் சமய-தத்துவ நூல்களை எழுதுவதில் கழிகின்றது. இதனால், என்னைகன் றாக இறைவன் படைத்தனன் தன்னைகன் றாகத் தமிழ்செய்யு மாறே' என்ற திருமூலரின் திருமந்திரம் அடியேனுக்குப் பொருந்து வதும் அவன் திருஅருள் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. 8. குமரகுருபரர். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் காப்பு. 9. நாச். திரு. 5 :6 10. திருமந்திரம்-81