பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன் 187 ஐயம்பாளையம் தாண்டவராய பிள்ளையவர்களின் கட்டடத்தில் கே. இராமசந்திர அய்யரின் அரிய முயற்சியால் மாணாக்கர் விடுதி (Students Hostel) ஒன்று தொடங்கப் பெற்றிருந்தது சென்ற ஆண்டுவரை இதில்தான் உயர்நிலைப் பள்ளி இயங்கி வந்தது. சுற்றுப்புற ஊர்களி லிருந்து கல்வி பயிலும் மாணாக்கர்கள் ஒட்டலில் உண்டு தங்குவதற்கு இடவசதியின்றித் தொல்லையுறுவதையும், ஐந்தாறு கல் தொலைவு நடந்தே பள்ளிக்கு வரும் மாணாக்கர்கள் அல்லலுறுவதையும் கவனித்த கே. இராமச் சந்திர அய்யர் உள்ளத்தில் எல்லா வசதிகளும் கொண்ட ஒரு விடுதியைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கால் கொண்டிருக்க வேண்டும். சில செல்வர்களை அண்மிப் பொருளுதவி பெற்றார். உயர்நிலைப் பள்ளி தம் கட்டடத்தி லிருந்தவரை வாடகை பெற்றிருந்த ஐயம்பாளையம் பிள்ளையவர்களிடமிருந்து வாடகையின்றி இலவசமாகப் பெற்றார் கட்டடத்தை. இந்தக் கட்டடத்தில் சுமார் முப்பது மாணாக்கர்களைக் கொண்டு விடுதி தொடங்கப் பெற் றிருந்தது. சுமார் முப்பது மாணாக்கர்கட்குத் தேவையான முப்பது மேசைகள், கையில்லாத முப்பது நாற்காலிகள், நூல்கள் வைத்துக் கொள்ள முப்பது சுவர் நிலைத்தட்டு (Shelf) இவற்றைப் பள்ளி கட்டடத்தை ஒப்பந்த வேலை யாக ஏற்று முடித்த நாரணமங்கலம் கணபதிரெட்டியாரிடம் இலவசமாகப் பெற்றார். அதேபோல் விடுதி அலுவலகத் திற்குத் தேவையான மேசை, நாற்காலி, பீரோக்களையும் இலவசமாகவே பெற்றார். ரெட்டிகுல வள்ளல்கள் : அ க் கா லத் தி ல் திருச்சி மாவட்டத்தில் தயாள சிந்தையுள்ள பல ரெட்டியார் குடும்பங்கள் இருந்தன. பொது நலத்தொண்டில் விருப்பார்வங் கொண்டு செல்வத்தைத் தாராளமாகச் செலவு செய்தனர்.