பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 நினைவுக் குமிழிகள்-1 அன்பர்பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே" என்ற தாயுமான அடிகளின் திருவாக்கை வேதவாக்காகக் கொண்டு போற்றுபவர்கள் இவர்கள். நாரணமங்கலம் கணபதி ரெட்டியார் குடும்பம் இத்தகைய அறங்களைச் செய்வதில் பெரும் புகழ் பெற்றிருந்தது. ஏதோ பொருளாதார நெருக்கடியால் க. நடராசன் என்ற அவர் திருமகனார் தொழிலில் பேரிழப்பைச் சந்திக்க நேர்ந்தது. சொந்த மாவட்டத்தைத் துறந்து சென்னை வந்து பல தொழில்களை மேற்கொண்டார். 'தருமம் தலைகாக்கும் என்ற பழமொழிக் கிணங்க இப்பொழுது நல்ல நிலையிலுள்ளார்; பொருளாதார இழப்பு நீங்கி செல்வச் செழிப்புடையவராகத் திகழ்கின்றார். தந்தையாரைப் போலவே இவரும் அடக்கமான பண்புடை யவர்; தயாள சிந்தை கொண்டவர். திருச்சி தென்னாற்காடு மாவட்டங்களில் ரெட்டியார் வகுப்பினர் மிக அதிகமாக உள்ளனர். பெரும்பாலும் இவர் கள் நி ல க் கி ழ வ ர் க ள் ; வேளாண்மையே இவர்களின் குடும்பத் தொழிலாக இருந்து வருகின்றது. இப்பொழுது தான் ஒரு சிலர் அத்தி பூத்த மாதிரி வாணிகத்திலும், கைத் தொழிலும், ஆலைத் தொழிலும் இறங்கிப் பேரும் புகழும் பெற்றுத் திகழ்கின்றனர். சங்கங்கள் வைத்துக் கிளர்ச்சி செய்வது கலியுக தர்மமாக நிலவி வருகின்றது. ஒவ்வொரு வகுப்பினரும் சங்கங்கள் வைத்துக் கொண்டு கிளர்ச்சி செய்து தம் வகுப்பைப் பிற்போக்கு வகுப்பினர் பட்டியலில் சேர்த்துக் கொள்கின்றனர். தா.பா. பராபரக்கண்ணி.155