பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன் 189 சாதிக்கு ஒரு நீதி வழங்கு மிந்தச் சமுதாயம் தனை மாற்ற முயன்றி டாமல் சாதிக்கு வீதிதொறும் சங்கம் வைத்தோம்; 'சங்ககாலம் ஒருவகையில் தோற்று வித்தோம்! என்று கவிஞர் இந்நிலையைக் கிண்டல் செய்கின்றார். இந் நிலை பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி இவற்றில் இடம் பெறுவதற்கும் அரசின் அலுவலராவதற்கும் துணை செய்கின்றது. உண்மையிலேயே நன்கு உழைத்து நல்ல மதிப் பெண்கள் பெற்றிருந்தாலும் முற்போக்கு வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் இச்சலுகைகளைப் பெற முடியாமல் போகின்றது. தேர்ந்தெடுக்கும் குழுவின் தில்லு முல்லுகளும், அரசியல் குறுக்கீடுகளும் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய நிலையை ஏற்படுத்தி விடுகின்றது. இவர்கள் அப்பாவிப் பிறவிகள்’. இந்நிலையில் தேர்வுகள் நடத்தும் அலுவலகங்களிலேயே மதிப்பெண் மாற்றச் சதி” நடைபெறுகின்றது; இது பயங்கரமான போக்கு. கேரளம்' இதற்கு இமயச் சான்றாகத் திகழ்கின்றது. தமிழகத்திலும் இந்தச் சதி தலைக்காட்டி வளரத் தொடங்கிவிட்டது! சாதிகள் ஒழிக்கப் பெற வேண்டுமென்று எம்மருங்கும் பெருங்கூச்சல்கள். அரசுகூட தெருப்பெயர்களிலுள்ள ஜாதிப் பகுதியை மட்டிலும் அழித்துச் சாதி ஒழிப்பில் பெரி முன்னேற்றம் கண்டு விட்டதாக மகிழ்ச்சி அடைகின்றது. "ஒன்றே குலம்’ என்று ஒப்புக்குத் தொகுப்புக்கள்!' அன்று முதல் பலசாதி அரிச்சுவடி வகுப்புக்கள்!" 2. கவிஞர் தாராபாரதி : புதிய விடியல்கள்-சாதிக் காய்-1 3. கவிஞர் தாராபாரதி: இன்னும் ஒரு சுதந்திரப்போர்