பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 நினைவுக் குமிழிகள்-1 ஆனால் நடைமுறையில்-செயற்கை முறையில்-சாதியின் பெயரால் ஏற்றத் தாழ்வுகளை உற்பத்தி செய்து கொண்டே போவதைக் காண முடிகின்றது. புதுவழியில் சாதிகளின் கிளைபி ரித்து பொதுவயலில் களைகளையே வளர்க்க லானோம்! உதவிகளைத் தருகையிலே வர்ண பேதம்: "ஒட்டுகளைப் பெறுகையிலே இனத்தின் பற்று; பதவிகளின் பங்கீட்டில் சாதி பேதம் , பணியிடத்தில் தனியிடத்தில் பாகு பாடு; சதவீதம் சாதிகளைப் பிரிக்கும் போது சமதருமம் எப்படித்தான் உருவெ டுக்கும்?" என்ற கவிஞரின் குரல் இந்நிலையை எடுத்துக்காட்டுகின்றது. சாதி அமைப்பு ஒழிக்கப் பெறாதவரை நாட்டிற்குக் கதிமோட்சமே இல்லை. ஒற்றுமையின்மைக்குப் பேர் போனது ரெட்டியார் சமூகம். தமிழகத்தில்தான் இப்படி என்றால் ஆந்திரத்திலும் இதே நிலைதான். "ஜனநாயகம்’ என்ற பேரில் நடைபெறும் நாடக ஆட்சி முறையில் பண நாயகம் எல்லா மட்டங்களிலும் தாண்டவமாடுவதால் இழிநிலைப் போக்குகள் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் கண்ணிலாக் குருடனுக்கும் தெரியும்படிக் காட்சி அளிக்கின்றன. சாதிக்கு அப்பாற்பட்டுச் செயல் புரிவது ஓர் உயர்ந்த பண்பு என்பதை நாம் ஒப்புக் கொண்டாலும், மக்களாட்சி முறையில்-வாக்குகள் வாணிக முறையில் பயன்படும் போது-இப்பண்பு நடைமுறைக்கு ஒவ்வாததாக அமை கின்றது. தவிர, இந்தப் பண்பு மணமறிந்து செயல்படுகின்ற தாகவும் தெரியவில்லை. அப்படிச் செயல்பட்டால் போற்றக் கூடியதுதான். ஆனால் உலகத்தோடொட்ட ஒழுக வேண்டு 4. டிெ. சாதிக்காய்-2