பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன் 191 மல்லவா? சூழ்நிலை முழுவதும் சாதிச் சாயம் ஏறியிருக்கும் போது ரெட்டியார் சமூகம் மட்டிலும் சாதிக்கு அப்பாற் பட்டது என்று சொல்வது-கருதுவது-எ வ் வா று பொருந்தும்? இனியொரு விதி செய்வோம் ஒற்றைச் சக்கரத்தில் வண்டி உருளாது ஒற்றுமைச் சக்கரத்தால் உலகையே உருட்டுவோம்." என்ற புதுக்கவிஞரின் குரல் வழிகாட்டட்டும். தாற்காலிக மாகச் சாதி ஒற்றுமைக்குப் போராடுவதே சரி என்று தோன்றுகின்றது. அடுத்து மாநில ஒற்றுமை; பின்னர் நாட்டு ஒற்றமை; அதன் பின்னர் உலக ஒற்றுமை என்று குறிக்கோள் விரிந்து கொண்டே போகட்டும். இந்தக் கொள்கையே மக்களாட்சி நிலவும் இக்காலத்திற்குப் பொருத்தமானதாகும் என்று தோன்றுகின்றது. இராமச்சந்திர அய்யரின் தன்னலமற்ற பணி: நான் உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்தபோது புதுக்கட்டடத்தில் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. பழைய கட்டடம் மாணாக்கர் விடுதியாக மாறியது. நானும் கணபதியும் விடுதியில் சேர்ந்துதான் படித்தோம். அந்தக் காலத்தில் கே. இராமச்சந்திர அய்யரின் தொண்டு பொன்னெழுத்து களால் பொறிக்கப் பெற வே ண் டி ய தாக இருந்தது. நாட்டுப் புறங்களிலிருந்து நகர்ப் புறத் திற்குக் கல்விபயில வரும் சிறுவர்கள் சீர்கெட்டுத் தான் தோன்றிகள்’ ஆகாமல் ஒழுங்காகப் படித்து முன்னேற்றம் அடைவதற்கு கே.ஆர். நிறுவிய மாணாக்கர் 5. மேத்தா. மு: காத்திருந்த காற்று-பக். 43