பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 நினைவுக் குமிழிகள்-1 விடுதி ஒரு புகலிடமாக இருந்தது. கே.ஆருக்கு ஒரு ஆண் பிள்ளையும் இரண்டு பெண் பிள்ளைகளும் இருந்தனர். தன் குடும்பத்தைக்கூட அதிகம் கவனியாமல் தான் நிறுவிய சுமார் முப்பது மாணாக்கர்கள் அடங்கிய மாணாக்கர் விடுதியான 'பெருங்குடும்பத்தில்'தான் அதிக அக்கறை செலுத்தி வந்ததை அக்கால மக்கள் நன்கு அறிவார்கள்; விடுதியில் தங்கியிருந்த நாங்கள் நன்கு அறிவோம். அதிகாலையில் நாலரை-ஐந்து மணிக்கு வந்து எல்லோரையும் துயில் எழுப்பிவிடுவார். அவர் இல்லம் முசிறி அக்கிரகாரத்தில் இருந்தது. அக்கிரகாரத்தின் கீழ்க்கோடியில் மாணாக்கர் விடுதி இருந்தது. அவர் இல்லத்திற்கும் மாணாக்கர் விடுதிக்கும் சுமார் அரை ஃபர்லாங் தொலைவு தான் இருக்கும். காலையிலும் மாலையிலும் மாணாக்கர் விடுதிக்கு வருகை புரிவதில் தவறமாட்டார். நாட்டுப்புறத்தி லிருந்து வந்த சிறுவர்கள் உருப்படியாவதற்கு இராமச்சந்திர அய்யர் மேற்கொண்ட பணி பெரியது; மிகப் பெரியது. மணிவாசகப் பெருமானின், பால் நினைந் துாட்டும் தாயினும் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை யுருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே! சிவபெரு மானே! யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ திணியே." என்ற திருப்பாடல் நாட்டுப்புறச் சிறுவர்களின் குரலாக ஒலிக்கட்டும். சிவபெருமானே! என்ற இடத்தில் இராமச் 6. திருவா. பிடித்த பத்து-9.