பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன் 193 சந்திரப் பெருமானே!" என்று நினைத்துக் கொண்டு அவர்கள் பாட வேண்டும் எனத் தோன்றுகிறது. இலக்கியக் கழகங்கள்: அந்தக் காலத்தில் யான் உயர் நிலைப் பள்ளியில் படித்த காலத்தில் பள்ளியிலோ அல்லது மாணாக்கர் உணவு விடுதியிலே இத்தகைய கழகங்கள் தோற்றுவிக்கப்பெறவில்லை. வகுப்பு வேலைகளையும், வெளியூர் மாணாக்கர்கள் தங்குவதற்கும் குறைந்த செலவில் உணவு கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்த தலைமை யாசிரியரோ, கே. இராமச்சந்திர அய்யரோ இந்தப் போக்கில் ஏன் சிந்திக்கவில்லை என்பதை என்னால் எண்ணிப் பார்க்க இயலவில்லை. சில சமயம் கையெழுத்துப் போட்டி (தமிழ், ஆங்கிலம்), ஓவியப் போட்டி, விளையாட்டுப் போட்டிகள், சில சமயம் பேச்சுப் போட்டிகள்-இவற்றை நடத்தி இவற்றில் வெற்றி பெற்ற முதல்நிலை, இரண்டாம் நிலை மாணாக்கர்கட்குப் பரிசுகள் நல்கி வந்ததை நினைவுகூர்கின்றேன். நான் கூட கையெழுத்துப் போட்டிகளில் பரிசுகள் பெற்றிருக்கின்றேன். பள்ளி ஆண்டு விழாவோ, மாணாக்கர் ஆண்டுவிழாவோ அடிக்கடி நடைபெற்றதை நான் நினைவுகூர முடியவில்லை. மாவட்டக் கழகத் தலைவர் பள்ளியைப் பார்வையிட வரும் போது அவசரமாக மாணாக்கர், ஆசிரியர்கள் அடங்கிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பெறும். உணவு விடுதிக்கும் தலைவர் அழைத்துக் கொண்டு வரப்பெறுவார். ஆனால் கூட்டம் ஒன்றும் இராது. பள்ளியில் அமைக்கப்பெற்ற கூட்டத் திலேயே தலைவர் உணவு விடுதியின் இன்றியமையாமை பற்றியும், அது நடைபெற்றுவரும் சிறப்பு பற்றியும், ஏதோ பேசிவிட்டுச் சென்று விடுவார் . ஒருசமயம் மாவட்டக்கழக ஆட்சித் தலைவர் (நான் பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது) –13 –