பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 நினைவுக் குமிழிகள்-1 பள்ளியைப் பார்வையிட வந்ததாக நினைவு. அப்போது மாவட்டக்கழகத்தின் தலைவராக இரு ந் த. வ ர் T.M. நாராயணசாமி பிள்ளை. அவர் பள்ளிக்கு வந்தபோது கே.ஆர். அவர்கள் அவருக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்ததாக நினைவு. "ஐயா சுப்பு நல்ல மாணாக்கன். பள்ளியிலேயே முதன்மையாக இருப்பவன்; கடும் உழைப் பாளி. இவனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. தூண்டுதலும் உதவியும் கிடைத்தால் நன்றாக முன்னுக்கு வரும் சாத்தியக் கூறுகள் உண்டு.’’ என்று என்னைப்பற்றித் தலைவரிடம் பேசியதை நினைவுகூர முடிகின்றது. நான் ஐந்தாம் படிவத்தில் பயின்று வந்தபோது முசிறி யில் உள்ள செல்வ குடும்பத்தைச் சேர்ந்த மைனர் கிருட்டினசாமி பிள்ளை திருச்சி புனித சூசையப்பர் கல்லூரி யில் பட்டப்படிப்பு வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அவர் முயற்சியால் முசிறி உயர்நிலைப்பள்ளியில் பழைய மாணாக்கர் கழகம்’ என்பதன் ஆதரவில் ஒரு பெருங் கூட்டம் நடைபெற்றது. திருச்சி புனித சூசையப்பர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திரு மு. நடேச முதலியார் திருக்குறள் என்ற தலைப்பில் பேசினார். அக்காலத்திலோ பின்னர் கல்லூரி வாழ்க்கையிலோ இத்தகைய ஒர் அழகிய இலக்கியப் பொழிவை நான் கேட்டதே இல்லை. அந்தப் பேச்சால்தான் திருக்குறளின்மீது எனக்கு ஓர்வித ஆர்வமும் மதிப்பும் ஏற்பட்டது. அன்றிலிருந்து 'திருக்குறள் என்ற நூல் (கழகப் பதிப்பு) என் அரும் பொருளாக அமைந்து விட்டது. 7. பள்ளியில் எந்தவிதக் கழக அமைப்பும் இல்லை ே எல்லோரும் அறிவர். இப்படி ஒரு கழகம் லலாதிருந்தமை ஒரு சிதம்ப கசியம்’ - தான் சொல்ல ఫిక్షి ர இர என்று.