பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மொழிமூலம் கல்வி 195 அக்காலத்தில் இப்போது இருப்பதுபோல் நாளிதழ்கள், வார, பிறை, திங்கள் வெளியீடுகள் இல்லை. தமிழ் மொழிக்கு அதிக மதிப்பு இல்லாத காலம். உயர்நிலைப் பள்ளியிலிருந்த வரை செய்தித்தாள்களை யான் பார்த்ததே இல்லை. Hindu என்ற ஆங்கிலப் பத்திரிகையைப் பற்றிக் கேள்வியுற்ற துண்டு. சுதேசமித்திரன், ஆனந்த விதடன், பிரசண்ட விகடன்-இவற்றைப் பார்த்திருக்கின்றேன்; தொடர்ந்து படித்ததில்லை. ஈரோட்டிலிருந்து குடியரசு காரைக்குடியி லிருந்து குமரன்” என்ற பிறை இதழ்கள் வெளிவருவதாகக் கேள்வி; பார்த்ததில்லை. முசிறியில் பொது நூலகமோ, படிப்பகமோ இல்லையாதலின் இவற்றைப் பார்க்க வாய்ப்பு கள் இல்லை. அந்நியர் ஆட்சியில் அடிமையாக இருந்த நாட்டில் இவையெல்லாம் தோன்றுவதற்கு - அதுவும் முசிறி போன்ற சிற்றுார்களில் தோன்றுவதற்கு-வாய்ப்புகள் ஏற்பட வில்லை. கோட்டத்துTரில் திரு. குணம் நல்லப்ப ரெட்டியாருக்குப் 'பிரசண்ட விகடன் வந்து கொண்டிருந்தது, விடுமுறையில் என்னைப் படிச்கச் சொல்லி அருகிலிருந்தோர் பலர் கேட்டு மகிழ்வதற்கு வாய்ப்புகள் தருவார். குமிழி 26 26. தாய்மொழி மூலம் கல்வி நான் முசிறியில் பயின்றபோது எனக்கு வாய்த்த சில நல்லாசிரியர்கள் கற்பித்த சூழ்நிலையை இப்போது நினைவு கூர்கின்றேன். நான்காவது படிவத்தில் பயின்றபோது கற்பித்தவர் யாவர் என்பதைத் தெளிவாக இப்போதுநினைவு கூர முடியவில்லை. என்றாலும் புவிஇயல், வரலாறு கற்பித்த N. சுப்பிரமணிய அய்ர்ய நினைவுக்கு வருகின்றர்ா. அக்