பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 நினைவுக் குமிழிகள்-1 காலத்தில் இவரை மணி அய்யர்' என்றே அனைவரும் சொல்வார்கள். அந்தக் காலத்தில் மேற்படிவங்களில் ஏ. பிரிவிலுள்ள வரலாறு, புவியியல், ஆரம்ப கணிதம், பொது அறிவியல் போன்ற பாடங்கள் மட்டிலும் தமிழில் கற்பிக்கப் பெற்றன. நான்கு, ஐந்து, ஆறு படிவங்களில் பயின்ற புவியியல், வரலாறு, ஆரம்ப கணிதம், பொது அறிவியல் போன்ற பாடப்பகுதிசள் பள்ளியிறுதித் தேர்வுக்குரியவை. ஆரம்ப கணிதத்தில் பயிலும் சில முக்கிய விதிகள், தனி வட்டி, கூடுவட்டி, இயற்கணிதம் (Algebra), வடிவகணிதப் (Geometry) பகுதிகள் பள்ளியிறுதித் தேர்வுக்குரியவைகளாக அமைந்தன. ஐந்து, ஆறு படிவங்களில் சி-பிரிவிலுள்ள பாடங்களின் பகுதிகள் பள்ளியிறுதித் தேர்வுக்குரியவை இப்பிரில் முசிறி உயர்நிலைப் பள்ளியில் வரலாறு, புவியியல், இயற்பியல், வேதியியல், இயற்கணிதமும் வடிவ கணிதமும் என்ற பாடங்கள் கற்பிக்கப் பெற்றன. இப்பிரிவில் வரலாறு, புவியியலைத் தவிர ஏனைய பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப் பெற்றன. இவை விருப்பப் பாடங்கள். பள்ளி யிறுதித் தேர்வுக்குப் போகும் மாணாக்கர்கள் விருப்பப் பாடங்களாக இரண்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இவை சற்று ஆழமாகக் கற்பிக்கப்பெற்றன. 1932-33இல் தான் முதன்முதலாக வேதியியல் விருப்பப் பாடமாக முசிறி உயர்நிலைப் பள்ளியில் இடம் பெற்றது. வேதியியல் கற்பித்தல் T.K. இராமநாதப் பிள்ளையின் பொறுப்பிலும், இயற்பியல் கற்பித்தல் A. நாராயணசாமி அய்யர் பொறுப்பிலும், இயற்கணிதமும் வடிவகணிதமும் கற்பித்தல் கே. இராமந்திர அய்யர் பொறுப்பிலும், வரலாறு கற்பித்தல் மணி அய்யர் பொறுப்பிலும் புவியியல் கற்பித்தல் கோவிந்தசாமிப் பிள்ளை பொறுப்பிலும் சண்முகசுந்தரம் பிள்ளை பொறுப்பிலும் இருந்தன. இவர்களுள் மிக இளைஞராக இருந்தவர்கள் T.K. இராமநாதப் பிள்ளையும்