பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மொழிமூலம் கல்வி 197 சண்முகசுந்தரம் பிள்ளையும். நான் படிக்கும்போது முதன் முதலாக விருப்ப பாடமான வேதியியல் இராமநாதபிள்ளை யின் பொறுப்புக்கு விடப்பெற்றிருந்தது. பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்" என்பது பாரதியாரின் கல்வித் திட்டம்'. இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற வேண்டுமானால் தாய்மொழி யிலேயே எல்லாப் பாடங்களையும் கற்பித்தல் வேண்டும். "விலைப் பாலை விட முலைப்பால் (தாய்ப்பால்) சிறந்த தல்லவா? கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும்கூடத் தாய்மொழி வாயிலாகக் கற்பிக்கும் நிலை ஏற்பட்டால்தான் எத்தனையோ விதங்களில் வீணடிக்கப்பெறும் ஆற்றல்கள் சரி யான முறையில் பயன்படும். தாய்மொழியிலும் வடமொழி யிலும் உள்ள சமயக் கருத்துகளையும் அம்மொழிகளிலுள்ள கல்வெட்டுகள் போன்றவற்றையும் கூட ஆங்கிலத்தில் படிப் பதுதான் சிறப்பு என்று கருதும் குறுகிய எண்ணமும் நீங்கும். இராஜாஜி அவர்கள் சொல்லுவது போல, பலர் கலைச் சொல் பிரச்சினையையும் பயிற்றுமொழிப் பிரச்சினையை யும் ஒன்று சேர்த்துக் குட்டையைக் குழப்பி'ப் போதனா மொழிப் பிரச்சினையை என்றும் தீராத பிரச்சினைபோல் காட்டுகின்றனர். மக்கள் நலனையும் நாட்டு நலனையும் அடிப்படை நோக்கமாகக் கொண்டு தங்கள் போக்கே சரியென்று வக்கீல் வாதம் செய்யாது தெளிவாகவும் விரைவாகவும் பொருளறிவு பெறுவதற்கு வழிகாண்பதில் பரிவுடனும் இதயத் தூய்மையுடனும் ஒத்துழைத்தால் அனைத்தும் சீர்படும். ஆங்கில மொழியை இன்று உலகமனைத்தும் புகழ்ந்து பாராட்டுவதற்கு மிலட்டனும் ஷேக்ஸ்பியரும் படைத்துள்ள 8. பாரதியார் கவிதைகள்-முரசு-30 9. கல்கி-செப்டம்பர் 23-ஆம் நாள் இதழ் (1956),