பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 நினைவுக் குமிழிகள்-1 இலக்கியங்கள் மட்டிலும் காரணமன்று. உலகிலுள்ள கலை கனைத்தும் அம்மொழியில் யாவரும் உணரக் கூடிய முறை யில் வெளியிடப் பெற்றிருப்பதுதான் அம்மொழியின் உயர்வுக்குக் காரணமாகும். அதுபோலவே, தமிழ் மொழி சிறப்புடன் மிளிர்வதற்குக் கம்பனும் வள்ளுவனும் இளங்கோவும் ஏனையோரும் படைத்துள்ள இலக்கியங்கள் மட்டிலும் போதா. புத்தம் புதிய கலைகள்-பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே-அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை' என்ற குறை தமிழுக்கிருத்தல் கூடாது. இவையனைத்தும் புறநானூற்றுக் காலத்திலேயே தமிழில் இருந்தன என்று 'பழங்கதையையே அடிக்கடிச் சொல்லி மகிழ்வதால் யாதொரு பயனும் இல்லை. கல்லூரிகளிலும் தாய்மொழி வாயிலாகக் கல்வி பயிற்றப் பெற்றால்தான் இவை யனைத்தும் தமிழில் தோன்றுவதற்கு வாய்ப்புகள் அமையும். அப்பொழுதுதான் பிற நாட்டுச் சாத்திரங்கள் அனைத்தை யும் தமிழில் மொழிபெயர்க்கவும் முடியும். தமிழில் எல்லாக் கலைகளையும் எழுதவும் விளக்கவும் முடியும் என்பதைச் சிலர் இன்னும் ஒப்புக் கொள்வதில்லை இவர்கள் தமிழ் மொழியில் எல்லாவற்றிற்கும் தக்க கலைச் சொற்கள் இல்லாத காரணத்தால் இவ்வாறு எண்ணு கின்றனர். எந்த மொழியிலும் அதன் வாயிலாகப் பொருள் களை விளக்க முயன்றாலன்றிப் புதிய கலைகட்கு வேண்டிய சொற்களும் தொடர்மொழிகளும் செவ்வனே அமைவ தில்லை.பொருள்களை எடுத்துக்கொண்டு விளக்க முயன்றால் இவை தாமாகவே அமைந்து விடும். இவ்வாறே மேற்புல 10. பா.க. தமிழ்த்தாய்-9