பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மொழி மூலம் கல்வி 199 மொழிகளனைத்திலும் கலைச்சொற்கள் உண்டாகி, அம் மொழிகள் வளர்ச்சியடைந்து வருகின்றன. கலைச் சொற்களை உண்டாக்கிக் கொண்டு தாய்மொழியில் கற்பித் தல் தொடங்க வேண்டும் என்று நினைப்பது, நீந்தக் கற்றுக் கொண்ட பிறகு நீரில் இறங்க வேண்டும் என்று எண்ணுவது போலாகும். செயலில் இறங்கினால்தான் அனைத்திலும் சீர் படும். இலக்கிய இலக்கண வளமும் சொற்களஞ்சியப் பேறும் பெற்றுள்ள தமிழ் மொழியின் நீர்மையை அறிந்து பிற கலை களைத் தமிழ்மொழியில் வடித்துத் தரும் பணியில் ஈடு படுவோர்கள்தாம் தமிழ்மொழி அனைத்திற்கும் வளைந்து கொடுக்கும்’ என்ற உண்மையை அறிவர். அப்பொழுதுதான் "சொல்லும் திறமை தமிழ்மொழிக்கில்லை என்ற குறையும் நீங்கும். தமிழ்மொழியும் வளர்ந்து மேலும் வளம்பெறும். ஐந்தாண்டுத் திட்டங்களில் எவ்வளவோ பெருந் தொகைகள் பல துறைகளுக்குச் செலவழிக்கப் பெறுகின்றன. ஒவ்வொரு கலைத்துறையிலும் மண்டல மொழிகளில் பல நிலைகளிலும் வெளிவரும் நல்ல நூல்கட்கு ஐயாயிரம்: பத்தாயிரம் ரூபாய்கள் பரிசளிக்கும் திட்டத்தை அரசினர் மேற்கொண்டால் பல நூல்கள் உண்டாகி வெளிவரும். அவற்றுள் சிறந்தவற்றுக்குப் பரிசுகள் நல்கி, அரசினரோ பல்கலைக்கழகங்களோ வெளியிட்டு, அவற்றின் துணை கொண்டு செயலில் இறங்கலாம். நாளடைவில் பல குழுக் களை நிறுவி, நூல்களைப் படைத்தவர்களையும் குழுவில் உறுப்பினர்களாகச் செய்து, கலைச்சொற்களை அறுதி யிடுவதில் வெற்றியும் பெறலாம். இவ்வாறு திட்டமிட்டுப் பணியாற்றினால்தான் அனைத்தும் விரைவாகவும் திறனுட னும் சீர்பட்டு நடைமுறைக்கு வரும். உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதித் தேர்வுக்குரிய ஏபிரிவுப் பாடங்களைத் தமிழிலும், சி-பிரிவுப் பாடங்களை