பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 நினைவுக் குமிழிகள் -1 ஆங்கிலத்திலும் வரலாறு, புவியியலைத் தவிர பயிலும் போது ஒருவித எளிமையையும் திறமையையும் காண முடிந்தது; நல்ல வேட்டியும், சட்டையும் மேலாடையும் (அங்கவஸ்திரம்) காலுக்குப் பொருத்தமான நடையனும் (செருப்பு) அணிந்து கொண்டு தார் சாலையில் இராஜநடை யில் செல்லுவது போன்ற உணர்வு ஏற்படுவதை உணர்ந்தேன். ஆங்கிலத்தில் பயிலும்போது நாட்டுப் புறத்தான், நீண்ட குழாய்ச் சட்டை, மேல் சட்டை, கழுத்துப் பட்டைத் தொங்கல் (Tie) அதற்குமேல் மேலங்கி (Coat) காலில் மூடிய காலணி (Shoe) தலையில் தொப்பி இவற்றை அணிந்து கொண்டு தள்ளாடித் தள்ளாடி நடப்பது போன்ற உணர்வும் எழுந்ததையும் உணர்ந்தேன். புதிய காலணியாக இருந்தால் அது காலையும் கடிக்கும். கழற்றி எறிந்துவிட வேண்டும் என்றும் தோன்றும். தவிர, அக்காலத்தில் நாட்டுப்புறங்களிலிருந்து வந்து உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணாக்கர்கட்கு ஆங்கில அறிவும் போதாது. கற்பிக்கும் ஆசிரியர்களுள் பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில் எளிதாக விளக்கவும் முடிவதில்லை. நான் கணிதமும் வேதியியலும் விருப்ப பாடமாகப் பயின்றதனால் மொழிப் பிரச்சினை அதிகமாக எழவில்லை. காரணம், உயர்நிலைப் பள்ளி மட்டத்தில் இவற்றிற்கு அழுத்தமான ஆங்கில அறிவும் தேவை இல்லை. ஆசிரியர்களும் இவற்றை எளிதாக விளக்க முடிவதையும் அறிந்தேன். வரலாறு, புவியியல் பயில்பவர் கட்கு ஆங்கில அறிவு குறைவாக இருந்தால் கருத்துகளைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியாது. கற்பிப்போரும் தம்மொழி அறிவுக் குறைவினால் தெளிவாக விளக்க முடிவதில்லை. நல்ல மொழியறிவுடன் ஆசிரியர்கள் கருத்து களை விளக்கினாலும், ஆங்கில மொழியறிவுக் குறைவினால் மாணாக்கர்கள் தெளிவும் பெற முடிவதில்லை. நன்றாக