பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மொழிமூலம் கல்வி 20i ஆங்கிலத்தில் விளக்க முடியாத ஆசிரியர்கள் குறிப்புகள் (Notes) எழுதச் சொல்லி சொல்லுவதெழுவதுபோல் (Dictation) கற்பித்து மாணாக்கர்களின் கையை ஒடித்து விடுவார்கள். எழுதிக் கொள்ளும் மாணாக்கர்களும் எழுத்துப் பிழைகள் மலிந்த ஆங்கிலத்தில் எழுதிக் கொள்வார்கள்; தம் ஆங்கில மொழியறிவுக் குறைவே இதற்குக் காரணமாகும். வகுப்புத் தேர்வுகளிலும் பருவத் தேர்வுகளிலும் குறிப்புகளை நெட்டுருப் போட்டு பிழை மலிந்த ஆங்கிலத்தில் வாந்தி எடுப்பார்கள். குழந்தை வாந்தி எடுக்கும்போது தாய் வாந்தியை வாரிக் குழந்தையின் வாயைக் கழுவித் துடைத்துச் சீர்படுத்துவது போலவே, மனச்சான்றுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணாக்கர்கள் எழுதியவற்றில் காணப்பெறும் எழுத்துப் பிழைகள், வாக்கியப் பிழைகள், கால மயக்கப் பிழைகள் போன்றவற்றைச் சுட்டிக் காட்டித் திருத்துவார்கள். வரலாற்றுப் பாடம் ஆங்கிலததில் கற்பிக்கும் பாடமாக அமைந்து இவ்வாறு ஆங்கிலத்தில் கற்கும்போது நல்லாசிரியர்கள் அமையும் பேறு பெற்றால் மாணாக்கர்களின் பொருளறிவு பெருகுவதை விட அவர்களின் ஆங்கில அறிவு வளர்ந்திருந்ததைக் காணமுடிந்தது. நாடு விடுதலை பெறுவதற்கு முன்னர் எல்லாப் பாடங் களும் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப் பெற்றமையால்தான் அக்காலத்தில் உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர்களின் ஆங்கில அறிவுகூட நன்றாக இருந்தது. இதனால் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வேண்டிய எழுத்தர்கள் சிரமமின்றிக் கிடைத்தனர். பெரும்பாலும் இவர்கள் அடிமை மனப்பான்மையுடனேயே பணியாற்றி ஆட்சியாளர்களின் அன்புக்கும் பாராட்டு தலுக்கும் பாத்திரர்களாயினர். அக்காலத்தில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் தரப்பெறாத தால் மாணாக்கர்களிடம் தமிழறிவு நன்கு அமையாதிருந்தது.