பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P02 நினைவுக் குமிழிகள்-1 நாடு விடுதலை பெற்ற பிறகு பல நிலைகளிலும் தமிழிலும் பாடங்கள் கற்பிக்கப்பெறுகின்றன. இதனால் இவர்களிடம் தமிழறிவு நன்கு ஏற்படவில்லை. இதற்குக் காரணம் என்ன? இவர்களில் பெரும்பாலோருக்கு நல்ல மொழியறிவு இல்லை; ஒரு சிலருக்கு மொழியறிவு நன்றாக அமைந்திருந்தாலும், அவர்கள் .ெ மா ழி யு ண ர் ச் சி யு ட ன் கற்பிப்பதில்லை. மாணாக்கர்களின் எழுத்து வடிவத்தில் காணப்பெறும் பிழை களை அவ்வப்போது களைவதுமில்லை. எல்லாம் தமிழ்; எதிலும் தமிழ் என்ற தமிழ் வெறிப்போர்க்குரல் (Slogan) நாம் எம்மருங்கும் முழங்கப் பெறுவதைக் கேட்டாலும் ஆசிரியர்கள் சில சாதாரணப் பிழைகளைக் கூடக் களைவ தில்லை; களைவதில் முயற்சி எடுத்துக் கொள்வதுமில்லை. அரசியல் விளரம்பரங்கள், அறிக்கைகள், வெளியீடுகள் இவை 'பிழை மலிந்த சருக்கங்களாகக் காணப்பெறுவதை நாம் எம்மருங்கும் பார்க்கின்றோம். ஆங்கிலத்தில் செய்யும் பிழை களை எடுத்துக்காட்டும்போது நாம் நாணப்படுவதைப் போல், தமிழில் செய்யும் பிழைகளை எடுத்துக்காட்டும்போது சிறிதளவுகூட நாணப்படுவதில்லை. இன்று மொழி வளர்ச்சியைப் பற்றிய பிரச்சாரக் குரல் வெற்று வேட்டு போல்’ கேட்பதைத்தான் நாம் காணமுடிகின்றது. பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ் இயக்கம்' என்ற கவிதை நூலைப் படித்தால் இன்றைய தமிழ்மொழியின் அவல நிலை பளிங்கில் காண்பதுபோல் தெரியும். பல்லாண்டுகட்கு முன்னர் எழுதப்பெற்ற பாடல்கள் இன்றைய நிலைக்கும் பொருந்துவனவாக இருப்பதை எண்ணும்போது நாணித் தலைகுனிய வேண்டியுள்ளது,