பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லாசிரியர்கள் இருவர் 209 யின் வெளிக் கோணங்கள் 1, என்ற இடத்திலும் சந்திக் கின்றன, (i) 1 B 1, C என்பதை ஒரு வட்டநாற்கரம்என்பதை மெய்ப்பி, (ii) 1,1, என்ற கோணங்களின் மதிப்பு என்ன? இது சாதாரணக் கணக்குதான். சில ஆசிரியர்கள் இதனை வேக மாகக் கரும்பலகையில் எழுதி மாணாக்கர்களைத் தத்தம் குறிப்பேடுகளில் எழுதிக் கொள்ளச் சொல்லித் தம் பணியைத் தலைக்கட்டிவிடுவர். இது சில நிறைமதி மாணாக்கர்கட்குத் தெளிவாகும்; பல சராசரி மாணாக்கர்கட்கும் குறைமதி மாணாக்கர்கட்கும் புரிவதில்லை. அவர்கள் ஈ அடிச்சான் காப்பி போல் தத்தம் குறிப்பேடுகளில் எழுதிக் கொண்டு விடுவர். கே.ஆர். இந்தக் கணக்கை பின்னர்க் குறிப்பிட்ட இரு வகை மாணாக்கர்கட்கு வினாக்களை விடுத்து அவர்கள் சொல்லும் விடைகளைக் கொண்டே இக்கணக்கைக் கரும் பலகையில் செய்து காட்டுவார். அவர் இக்கணக்கைச் செய் வதில் அணுகும் முறை : வினா : ஒரு வட்ட நாற்கரம் என்பது என்ன? விடை : நாற்கரத்தின் நான்கு மூலைகளும் ஒரு வட்டத் தினுள் அமைத்தால் அது வட்ட நாற்கரம் எனப் படும் . வினா : அவற்றின் கோணங்களைப்பற்றி ஏதாவது தெரியுமா? விடை : தெரியும். வட்ட நாற்கரத்தின் நேர்எதிர்க் கோணங் களின் கூட்டுத்தொகை 180 டிக்ரியாக இருக்கும். வினா : முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூட்டுத் தொகை என்ன? விடை : 180°. —14–