பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனித சூசையப்பர் கல்லூரியில் சேர்ந்தது 279 ஆழ்வார் கூறுவதைப் போலவே 'திருமண் காப்பு இல்லாத நெற்றியில் பாழே என்ற கொள்கை உறுதியுடையவர் பெருமாள் ரெட்டியாரும். ஆகவே, மூத்தவர்கட்கும் பக்திமான்களுக்கும் திருமணநாட்களில் சுவை பயக்கக்கூடிய காலட்சேபங்களுக்கும் ஏற்பாடு செய்திருந்தார். அக்காலத்தில் - ஏன் இக்காலத்திலும் - நாமக்கல் வட்டத்தைச் சேர்ந்த பவுத்திரம், வரகூர், எருமைப்பட்டி போன்ற ஊர்களிலும் வேறு பல சிற்றுார்களிலும் பாகவத கோஷ்டி’ இருந்து வந்தது. வரகூரில் இராமசாமி ரெட்டியார்" என்ற பாகவதர் பெரும்புகழ் வாய்ந்தவர். அக்காலத்தில் நன்றாகக் காலட்சேபம் செய்வார்; அடக்க மான பண்புடையவர். இவர் காலட்சேபம் செய்தது என்னை மிகவும் வியக்க வைத்தது. "பக்த ராமதாஸ் சரித்திரம்’, சீதா கல்யாணம்', உருக்மிணி கல்யாணம்’ என்ற காலட்சேபங்களை மூன்று நாட்கள் மாலையில் கேட்டது இன்னும் என் உள்ளத்தில் பசுமையாக உள்ளது. நான்கு நாளும் வேங்கடாசலம்புரம், அரங்கசாமி தங்கி யிருந்தார். நெருங்கிய நண்பரின் திருமணமல்லவா? நானும் என் தம்பி கணபதியும் திருமண நாட்களில் செங்காட்டுப் பட்டியில் தங்கியிருந்தோம். நாடோறும் அரங்கசாமியிடம் பேசிப் பொழுது போக்கினோம். கல்லூரியில் சேர்ந்தால் எங்குத் தங்குவது? எங்கு உண்பது? என்பன போன்ற விவரங்களையெல்லாம் கலந்து உரையாடி மகிழ்ந்தேன். ஒரு சில வாரங்களில் கல்லூரி திறந்தது; நானும் அரங்கசாமியின் துணையால் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் சேர்ந் தேன். அப்போது அரங்கசாமி பி. ஏ. இரண்டாவதாண்டு (இறுதியாண்டு) வகுப்பில் கணிதத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று கொண்டிருந்தார். 5. தொண்ணுாறு அகவையைத் தாண்டிய இப்பெருமகனார் இன்றும் வாழ்ந்து வருகின்றார் (நாவலடிப் பட்டியில்).