பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 நினைவுக் குமிழிகள்-1 நேராக அவர் அறைக்குச் சென்று பெட்டி படுக்கையை அவர் அறையில் வைத்துவிட்டு அவர் உணவு கொள்ளும் ஆதிகுடி வேங்கட்டராமய்யர் உணவு விடுதியில் அவர் விருந்தினனாக உணவு கொண்டு அவருடன் புனித சூசையப்பர் கல்லூரியில் கட்டணம் செலுத்திக் கல்லூரியில் சேர்ந்து கொண்டேன். புத்தகக் கடைக்குச் சென்று கிடைக்கும் புத்தகங்களையும் தேவையான குறிப்பேடு களையும் வாங்கிக் கொண்டு அறைக்கு வந்து சேர்ந்தேன். மாலையில் அறைக்குத் திரும்பிய அரங்கசாமி அவர் அறைக்குப் பக்கத்திலேயே எனக்கும் ஒர் அறைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். தனி அறை; மாத வாடகை ரூபாய் ஐந்து. அக்காலத்தில் இது என் பொருளாதார நிலைக்குச் சற்று அதிகமாக இருந்தாலும் குளியலறை, கழிப்பறைகள் தனித்தனியாக இருந்தமையாலும், தனிமையில் அமைதி யாகப் படிப்பதற்குத் தக்க சூழ்நிலை அமைந்திருந்ததாலும் ஓராண்டு முழுவதும் அதில் தங்கியிருந்தேன். நாங்கள் தங்கியிருந்த அறை திருச்சியில் சவுக்கு (நகர் மண்டபம்) - (Town Hall) என்ற பகுதியில் இருந்தது. அஃது அக்காலத்தில் 'காசியப்பா ராவுத்தர் ஸ்டோர்’ என்ற பெயரால் வழங்கி வந்தது. ஒரு முஸ்லீம் சீமானுக்குச் சொந்தமானது. அந்த ஸ்டோரின் கீழே இரண்டு வரிசைகளில் குடும்பத்துடன் தங்கு வோருக்குத் தண் ணிர்க் குழாய், கழிப்பறைகளுடன் வீடுகள் அமைந்திருந்தன. மாடியில் இரண்டு வரிசைகளில் பல அறைகள் இருந்தன. மாடிக்குப் போவதற்குத் தனிப் படிக்கட்டுகளும், கீழே மாடியில் தங்குவோருக்குத் தனிக் கழிப்பிடங்களும், குளியலறைகளும் இருந்தன. தங்கும் இடம், உணவுகொள்ளும், இடம் கல்லூரி ஒரு பெரிய முக்கோண அமைப்பில் இருந்தன. காலையில் சென்று மாலையில் திரும்பும் வரையில் ஒரு கல் தொலைவு நடக்க வேண்டி யிருக்கும், இரவு உணவு கொள்ளப்போவதற்கும் திரும்பு