பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ், ஆங்கிலக் கட்டுரை மொழியாக்க வகுப்புகள் 281 வதற்கும் மீண்டும் அரைக்கல் தொலைவு நடக்க வேண்டும். இப்படி இடைநிலை வகுப்பில் (Intermediate) ஓராண்டு கழிந்தது. குமிழி - 34 34. தமிழ், ஆங்கிலக் கட்டுரை, மொழியாக்க வகுப்புகள் தலாண்டு கல்லூரியில் ஆங்கிலப் பாடத்திற்கு (1) உரைநடைக்குப் பேராசிரியர் சின்னசாமி அய்யரும், (2) சிறு கவிதைகள் - நாடகம் இவற்றிற்குப் பேராசிரியர் லாரன்ஸ் சுந்தரமும் (3) கட்டுரை, - துணை நூல்கட்கு செக்யூரா சாமியாரும், (4) நீதிப் பாடத்திற்கு முதல்வர் லீ சாமியாரும் ஆசிரியர்களாக அமைந்தனர். தமிழ்ப் பாடத் திற்குப் பேராசிரியர் நடேச முதலியாரும், கட்டுரை - மொழி பெயர்புக்குத் திரு. கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்களும் ஆசிரியர்களாக அமைந்தனர். இயற்பியலுக்கு காம்பர்ட் சாமியாரும் (ஃபிரெஞ்சுக்காரர்) கணிதத்திற்குப் பேராசிரியர் சீநிவாசனும், வேதியியலுக்கப் பேராசிரியர் கோவிந்தராவும் ஆசிரியர்களாக அமைந்தனர். இவர்கள் கற்பித்தலால் யான் பெற்ற பயன்களை இக்குமிழியில் நினைவு கூர் கின்றேன். விருப்பப் பாடங்களைத் தவிர எல்லாப் பாடங் களையும் தமிழிலே கற்றதாலும், உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலத்தில் பேசும் பழக்கத்தை ஏற்படுத்தாமையாலும் முதலாண்டு முழுதும் என்னைக் கல்லூரி வாழ்வில் பொருத்திக் கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டேன். ஆங்கிலம் : முதல்வர் லீ சாமியார் நாட்டுப்புறத்தி விருந்து வந்த எம் போன்றார்கள் மீது அன்புடன் இருந்தார். ஏதேதோ சொல்லுவார்; சிரிப்பார். சொல்லுவதில் பாதி