பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 நினைவுக் குமிழிகள்-1 புரிவதில்லை. ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி இவர் வகுப்பில் நன்கு கிடைத்தது. மாணாக்கர்களிடம் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார். வகுப்புகள் நகைச்சுவை ததும்பி வழியும். அவர் பேசுவது நாட்டுப்புறத்திலிருந்து வந்த என் போன்ற சிலருக்குப் புரியாது. இருந்தாலும் நகைச் சுவைப் பேச்சை லீ சாமியார் உதிர்க்கும்போது பலர் சிரிப்பர்; காரணம் தெரியாமல் நாங்களும் சிரிப்போம் - கூட்டத்தில் கோவிந்தா போடுகின்ற மாதிரி. பின்னர் சிரித்த காரணத்தைக் கேட்டு அறிந்து கொள்வேன். பெரும்பாலும் குளித்தலை, இலால்குடி பக்கமிருந்து இரயிலில் வரும் மாணாக்கர்கள் அடிக்கடித் தாமதமாக வருவர். அவர்களை நோக்கி வேடிக்கைப் பேச்சை வெடிப்பார். 'ஏன் தாமதமாக வருகின்றீர்கள்?" 'இரயில் தாமதமாக வந்தது' "நீங்கள் சாமான் வண்டியில் வந்தீர்களா?" என்று கேட்டு நகைப்பார். எல்லோரும் அவருடன் சேர்ந்து p560&l'IGLumlb. Qafi group5u “Lee Composition' stairsp ஒரு நூல் மிகச் சிறந்தது. எல்லோரும் அதைக் கட்டாயம் வாங்க வேண்டும். அதில் சில பகுதிகளை - மரபுச் சொல், தொடர் போன்றவைகளை - அடிக்கடி விளக்குவார் - HLIGuir SI Know Your English GT65rd LGS "Q55' ஆங்கில நாளிதழில் வருகின்றதல்லவா? - அது மாதிரி. ஆங்கில மொழியை நன்கு கற்கவிரும்புவோர்க்கு இவர் வகுப்பு மிகவும் பயனுடையதாக இருக்கும். திரு லாரன்ஸ் சுந்தரம் முதலாண்டு மாணாக்கர்கட்கு Minor Poems (சிறு கவிதைகள்) என்ற பகுதியை எளியமுறையில் அழகாகப் பேசி நடத்துவார். உயர் நிலைப் பள்ளியில் ஆங்கில வகுப்பு பெரும்பாலும் தமிழில் நடைபெறும். இதனால் ஆங்கிலத்தில் பேசும் பழக்கம் ஏற்படுவதில்லை. ஆசிரியர் ஆங்கிலத்தில் பேசினாலும் பெரும்பாலோர் தமிழில் பதிலிறுப்பதையே