பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ், ஆங்கிலக் கட்டுரை மொழியாக்க வகுப்புகள் 283 வழக்கமாகக் கொண்டிருப்பார். இரண்டாம் ஆண்டில் ஷேக்ஸ்பியரியன் இரண்டாம் ரிச்சர்ட் (Richard - 11) என்ற நாடகத்தை நடத்துவார். இந்த ஆண்டு கடல் மடை திறந்ததுபோல் மிக அழகாகப் பேசுவார். அலகபாத் அருகில் கங்கை வெள்ளத்தைக் காண்பதுபோல் இருக்கும். இரண்டு ஆண்டுகளிலும் திரு. லாரன்ஸ் சுந்தரத்தின் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்த வண்ணம் இருக்கும். அவருடைய வகுப்பை எதிர் நோக்கிக் கொண்டே இருப்போம். செக்யூராசாமியார் தாழ்ந்த குரலில் பேசுவார்; அழகாகப் பேசுவார். கடைசிப் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவர்கட்கு இவர் பேசுவது சரியாகக் காதில் விழுவதில்லை. ஆனால் பேச்சு யமுனை வெள்ளம்போல், தெளிவாக இருக்கும். இ ைட நி ைல வகுப்புகளில் ஆங்கிலத்தை நன்கு கற்க முடிந்தது; அழுத்தமான அறிவும் ஏற்பட்டது. தமிழ் பேராசிரியர் நடேச முதலியாரிடம் தமிழ் கற்கும் பேறு கிடைத்தது. மூடிய கோட்டு, ப ஞ் ச க ச் ச ம், வெண்ணிறத் தலைப்பாகை இவை இவரது கருமையான திருமேனிக்குப் பொலிவூட்டும். செய்யுட் பகுதியை மிக அருமையாக நடத்துவார். இவர் தலைப்பாகை அழகாக அமைவதில்லை; மூட்டை தூக்குபவன் சும்மாடுபோல் தோன்றும் வகுப்பில் இவர் உட்கார்ந்து இருப்பதை நான் கண்டதே இல்லை; நின்ற வண்ணமே பாடம் நடைபெறும். என்னுடைய கவனம் எல்லாம் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் அதிகமாகச் சென்றதால் தமிழிலும் ஆங்கிலத்திலும் அதிகக் கவனமும் இல்லை; அக்கறையும் இல்லை. ஆனால் பேராசிரியர் நடேச முதலியார் சில மாணாக்கர்பால் அதிக அக்கறையும் பாசமும் கொண்டிருந்தார். அடிக்கடி வீட்டிற்கு வந்து தம்மைக் காணுமாறு சொல்லுவார். நான் காசியப்பா ராவுத்தர்