பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 நினைவுக் குமிழிகள்-1 ஸ்டோரிலிருந்தமையால் மலைக்கோட்டை யானைக்கட்டித் தெருவில் வாழ்ந்த பேராசிரியரை எளிதில் சென்று காண முடிந்தது. தந்தையனைய பாசத்தைக் காட்டினார்: அறவுரை கூறினார். தம்பி, நீ நாட்டுப்புறத்திலிருந்து வருபவன். சிறுவயதில் தந்தையையும் இழந்து நிற்கின்றாய் அன்னையார் சிரமத்துடன் பணம் அனுப்புகின்றார். நகரச் சாயை உன்மீது படியாது காத்துக் கொள்க. மாணவர் உலகைத் தொற்றுநோய்போல் பற்றும் சிறு சுருட்டுப் பிடிக்கும் பழக்கம் உன்னைப் பற்றாது பாதுகாத்துக் கொள்க. அடிக்கடிப் படக்காட்சிகளைக் காண்பதைத் தவிர்க்க, அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை மேற் கொள்க. சனிக்கிழமை கல்லூரி நடைபெறுவதால் ஞாயிறு அன்று எண்ணெய் தேய்த்து முழுகு; சனிநீராடு’ என்பது பாட்டியின் வாக்கல்லவா? அது கண்ணுக்கும் நல்லது. "இணக்கம் அறிந்து இணங்கு என்பதையொட்டி நல்லா ரோடு பழகு. நல்லிணக்கம் அல்லது அல்லற்படுத்தும்’ என்பதைப் படித்திருப்பாய்...' என்பன போன்ற அறிவுரை களைத் தருவார். நன்றாக வளரும் செடிகளில் நோய்கள் தாக்குவதுபோல், கல்லூரி வாழ்வில் முன் குமரப்பருவம், பின் குமரப் பருவத்திலிருக்கும் மாணாக்கர்கள் தீய பழக்கங் களாலும் தீயோர் கூட்டுறவாலும் கெட்டழிவது இயல்பு என்பதை நன்கு அறிந்த பேராசிரியர் முதலியார் கூறின அறிவுரை இன்றளவும் என்னைக் காத்து நிற்கின்றது. சிறு சுருட்டுப் பழக்கம் என்னை நாடவில்லை தீயோர் கூட்டுறவும் என்னைத் தீண்டவில்லை. உயர்நிலைப் பள்ளி வாழ்க்கையில் என்னைக் கட்டிக்காத்த திரு K. இராமச்சந்திர அய்யர் போல், கல்லூரி வாழ்க்கையில் என்னைப் பட்டிமேயவிடாது காத்தவர் பேராசிரியர் நடேசமுதலியார் என்பதை இன்றும் நன்றியுடன் நினைவுகூர்கின்றேன். இவர் ஊட்டிய அற வுணர்வும் அடிக்கடிக் காணும் பேறும் என்னைத் தமிழிலும்