பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ், ஆங்கிலக் கட்டுரை, மொழியாக்க வகுப்புகள் 285 சிறிது கவனத்தைக் காட்டச் செய்தன. மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வையும் எழுதச் செய்தன. அதில் முதல் நிலையும் பெறச் செய்தன. "சார்ந்ததன் வண்ணமாதல்’ என்ற சித்தாந்த உண்மையையும் இப்போது காணமுடிகின்றது. இடைநிலை வகுப்புகளில் நான் கற்ற பகுதிகள் நினைவில் இல்லை. நான் மிக்க சிரமத்துடன் கற்ற 'காண்டவ தகனச் சருக்கம் இன்றும் நினைவுகூர முடிகின்றது. வட சொற்கள் அதிகமாக விரவி வருவதால் கற்பித்தலும் சிரமம்: கற்போர்கள் மனத்தில் நிலைநிறுத்தல் அதனிலும் சிரமம். பேராசிரியர் நடேச முதலியார் இப்பகுதியை மிக நன்றாகக் கற்பித்தார். இப்பகுதியைக் கற்பிக்கும்போது பாடம் மெதுவாகவே சென்றது. இச்சருக்கத்தில் இப்போது மூன்று பாடல்களை நினைவுகூர முடிகின்றது. தொழுதரு விசயன், தாலுஏ ழுடையோன் சுடர்முடி நனைந்திடு வதன்முன், எழுமுகில் இனமும் பொழிதரு மாரி யாவையும் ஏவினால் விலக்கி, முழுதுல கமும்தன் னிடத்தடக் கியவான் முகடுற முறைமுறை அடுக்கி, குழுமுவெங் கணையால் கனல்-கட வுளுக்குக் கொற்றவான் கவிகையும் கொடுத்தான். ஆழ்தரு பரவை ஏழும் வற் றிடுமா(று) அழித்தகார் உமிழ்ந்திடு நெடுநீர் தாழ்தரு சரத்தால் மேய்ந்ததற் கிடையோர் தனித்திவ லையும்பொசி யாமல் வீழ்தரும் அருவி பாவகன் தனக்கு விசயன்அன் றளித்த பொற்குடைக்கு சூழ்தர நிரைத்துத் துக்கிய முத்தின் சுடர்மணித தொடையல்போன் றனவே.