பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 நினைவுக் குமிழிகள்-1 மண்டிமீது எழுந்த வன்னியின் சிகைகள் இந்திரன் மதலைவா ளிகளால் கண்டகூ டத்திற்கு அமைந்தசெம் பவளக் காண்தகு தூண்திரள் காட்ட அண்டகூ டத்திற்கு இந்திரன் பளிங்கால் அமைத்தபல் ஆயிரங் கோடி கண்டது ணங்கள் போன்றன, பரந்து தனித்தனி முகிழ்பொழி தாரை." என்பவை இந்திரன் ஏவலால் மேகங்கள் பொழிந்த மழை யைத் தடுக்க அருச்சுனன் சரக்கூடம் அமைத்தலைக் காட்டுபவை. பாடலில் உள்ள காட்சிகளைப் பேராசிரியர் மாணாக்கர் மனத்தின் முன் நிறுத்துவது அற்புதம். கதையைச் சுருக்க மாகக் கூறி வகுப்பையே பாவனை ஆற்றல்மூலம் காண்டவ வனத்தருகில் இட்டுச் கென்று விடுவார். மழை தீயை நனைக்காமல் குழுமுவெங்கணையால் கொற்றவான் கவிகை கொடுத்தல், குடையில் வீழும் நீர் சிறிதும் குடைக்குள் கசியாமல் பக்கங்களில் வழிதல் பொன்குடைக்கு முத்து மாலைகள் அமைந்தனபோல் காணப்பெறுதல், அக்கினி கொழுந்து விட்டெரிதல் பார்த்தன் அமைத்த சரக்கூடத் திற்குப் பவளத்துரண்கள் அமைந்தாற்போல்காணப்பெறுதல், மழைதாரையாகப் பொழிதல் நான்முகன் படைத்த அண்ட கூடத்திற்கு இந்திரன் பளிங்கால் அமைத்த பல்லாயிரங் கோடி தூண்கள்போல் காணப்பெறுதல் ஆகிய காட்சிகளை மானசீகமாகக் காணச்செய்து மாணாக்கர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார், இந்தக் காட்சிகளைக் காண்பதற்கு வகுப்பில் அமைதி நிலவுதல் இன்றியமையாதது. இதை நிலை நாட்டுவது பேராசிரியரின் மந்திர ஆற்றலால்தான் 6. வில்லிபா - காண்டவதக. (36-38)