பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் ஆங்கிலக் கட்டுரை, மொழியாக்க வகுப்புகள் 287 முடியும். ஒரு குண்டுசி விழுந்தால்கூட அதன் ஒலி கேட்கும் அளவுக்குத் தமிழ் வகுப்பில் அமைதியை நிலை நாட்டுவார். பாடப்பகுதியிலுள்ள வடமொழிச் சொற்களின் பொருளை பலமுறை விளக்கிக் கூறி மனத்தில் பசுமரத்தாணியெனப் பதியச் செய்துவிடுவார். கட்டுரை எழுதுதல் : கட்டுரை பதினைந்து நாட்களுக் கொருமுறை எழுதுதல் வேண்டும். பெரும்பாலும் இது பிற்பகலில்தான் நடைபெறும் , இந்தக் கட்டுரைகள் துணைப் பாடநூல்களிலும் அமையும்; பொதுத் தலைப்பு களில் எழுதவேண்டியும் வரும். இன்னவகைக் கட்டுரை எழுதவேண்டும் என்பதைப் பேராசிரியர் முதலியார் அவர்களே வரையறை செய்வார். தலைப்பை உறுதி செய்து கொண்டு கட்டுரைப் பொருளை வகைசெய்து காட்டுவார். முன்னுரை, கட்டுரை உடல் (பல பகுதிகள்), முடிவுரை என்று வகுத்துக் காட்டி ஒவ்வொரு தலைப்புகளிலும் என்ன எழுத வேண்டும் என்று மனத்தில் ஆணித்தரமாகப் பதியும் படி விளக்குவார்; அரைமணி நேரம் இவ்விளக்கம் நடை பெறும். பிறகு எல்லோரும் லாலிமண்டம்’ என்ற இடத் திற்குச் சென்று எழுத வேண்டும். எழுதுவதற்கு வேண்டிய தாள்கள் மேசையின்மீது வரிசையாக வினியோகித்து வைத்துக் கொண்டு திரு. கிருஷ்ணசாமி அய்யங்கார் காத்துக் கொண்டிருப்பார். ஐந்து அல்லது ஆறுபக்கங்களில் அழகிய முறையில் எழுதவேண்டும். ஒன்றரை மணிநேரம் இருப்ப தால் பொருளை நன்கு நிரல்பட அமைத்து நிறுத்தி எழுதலாம். அழகான முறையில் இங்ங்னம் தரப்பெற்ற பயிற்சியை நன்முறையில் பயன்படுத்திக் கொண்டதால் இன்றும் மணிமணியாக முத்துக் கோத்தாற்போல் அழகாக எழுத முடிகின்றது. ஆங்கிலக் கட்டுரை எழுதுவதும் இம்முறையிலேயே அமையும். திரு. கோபாலரத்தினம் என்ற ஒரு பயிற்சி