பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 நினைவுக் குமிழிகள்-1 அளிக்கும் ஆசிரியர் (Tutor) இம்முறையிலேயே அரைமணி நேரம் வகுப்பு நடத்தி ஒன்றரை மணி நேரம் எழுதச் செய்வார். ஆங்கிலத்தில் நன்கு எழுதும் ஆற்றல் பெற்ற தற்கு இப்பெருமகனாரே காரணம் ஆவார். மொழியாக்கப் பயிற்சிகள் : இவற்றை அற்புதமாக நடத்திப் பயிற்சியளித்தவர் திரு. கிருஷ்ணசாமி அய்யங்கார் என்பவர். இவர் வகுப்பு கலகலப்பாக இருக்கும். நன்றாக ஆங்கிலம் பேசுவார். (In days of antiquity) பழங்காலத்தில்’ என்று பேசும் செயற்கைப் பழக்கத்தைக் (Mannetism) கொண்டவராதலால் கல்லூரி மாணாக்கர்கள் இவருக்கு "ஆண்டிகுவிட்டி அய்யங்கார்’ என்று சாட்டுப் பெயர் வழங்கினர். இப்பெயராலேயே மாணாக்கர்கள் இவரைக் குறிப்பிடுவர். இதை இவரும் அறிந்து மகிழ்வார். இவர் வகுப்பில் சிரிப்பு அதிகமாகி அமைதியின்மை நிலவும்; இதை இவர் பொறுத்துக் கொள்வார்; தவறாகக் கருதார். மாணாக்கர்களின் உற்சாகமே இதற்குக் காரணமேயன்றி வேலையைத் தட்டிக் கழிப்பதன்று என்பதை இவர் நன்கு உணர்வார். மொழியாக்க ப் பயிற்சி தரும் முறையை இவர் அற்புத மாகக் கையாளுவார். மொழியாக்கம் செய்ய வேண்டிய பகுதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார். ஒரு வாக்கியத்தை எல்லோரையும் எழுதிக் கொள்ளசி செய்து அதை தமிழ் மொழியாக்கம் செய்யும்படி சொல்வார். தான் முன்னரே அந்த வாக்கியத்தை மொழியாக்கம் செய்து வைத்திருப்பார். மாணாக்கர் மொழியாக்கம் செய்திருப்பதை அங்கொருவர் இங்கொருவராகப் படிக்கச் செய்வார். பின்னர் . தாம் எழுதி வைத்திருப்பதைப் படிப்பார். இவற்றால் எல்லோரும் தத்தம் குறைநிறைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு வாய்ப்பாக இருக்கும். இவ்வாறு ஒரு மணி நேரத்தில் அவர் ஆறு அல்லது