பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிதம்........ கற்பித்த முறை 289 ஏழு வாக்கியங்களை மொழியாக்கம் செய்து காட்டுவார். இஃது ஒரு சிறந்த முறை என்பது என் கருத்து. இதனால் ஒவ்வொருவரும் தத்தம் மொழியாக்கங்களைத் திருத்தம் செய்துகொண்டு பெரும்பயன் அடைவர். ஆசிரியர் எல்லோருடைய மொழயாக்கங்களைத் தனித்தனியாகப் பார்க்கும் சுமை குறையும்; இப்படிப் பார்ப்பதாலும் யாதொரு பயனும் இல்லை என்பதும் தெளிவாகும். திருப்பதி யில் யான் மொழியாக்கப் பயிற்சிகள் இளங்கலை வகுப்பிற்குக் கற்பிக்கும் வாய்ப்பு கிடைத்தபொழுது இந்த முறையைக் கையாண்டு வெற்றி கண்டதை ஈண்டுக் குறிப்பிடாது இருக்க முடியவில்லை. குமிழி-35 35. கணிதம், இயற்பியல் வேதியியல் பாடங்கள் கற்பித்த முறை னித சூசையப்பர் கல்லூரியில் நான் இடைநிலை வகுப்பில் (Intermediate) கற்றபோது கணிதம் அறிவியல் ப ா ட ங் க ைள க் கற்பித்தவர்கள் நல்லாசிரியர்களாக அமைந்தனர். ஆசிரியர் பயிற்றும் முறையைப் பண்டையோர் 'ஈதல் இயல்பு' என்று குறிப்பிடுவர். இதனைப் பிறிதோர் இடத்தில் சுட்டியுள்ளேன். கணிதம் : உயர்நிலைப் பள்ளியில் திரு. K. இராமசந்திர அய்யர் போட்ட அடிப்படை கல்லூரி வாழ்வில் இந்தப் பாடத்தைப் பயில்வதற்குப் பெருந்துணை புரிந்தது. இந்தப் பாடத்தில் நானும் மிகவும் அக்கறையுடன் கற்கலானேன். இடைநிலை வகுப்பில் இந்தப் பாடத்தைக் கற்பித்தவர் பேராசிரியர் சீகிவாசன் என்பவர். எப்பொழுது வகுப்பிற்கு —19–