பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 நினைவுக் குமிழிகள்-1 வந்தாலும் ஏழெட்டு சுண்ணக் காம்புகளுடனும் (Chalk piece) துடைப்பானுடனும்தான் வகுப்பிற்குள் நுழைவார். வகுப்பு முடிந்து வெளியேறும்போது துடைப்பான்தான் மிஞ்சும். எல்லா ஆசிரியர்கட்கும் கரும்பலகை ஒரு முக்கிய சாதனமாக இருந்தாலும் கணித ஆசிரியருக்கு அது மிகவும் இன்றியமையாதது. ஒரு மணி நேரம் வாய்பாடுகளைக் கற்பித்தல், அவற்றை விளக்குவதற்குப் பல்வேறு வகையான புதிர்மானங்களைப் (Problems) போட்டுக் காட்டல் மிகக் கவர்ச்சிகரமாக இருக்கும். இயற்கணிதம் (Algebra) கோண கணிதம் (Trigonometry) இவற்றை மிக உயர்ந்த முறையில் கற்பித்தார். ஒரு மணி நேரம் கற்பித்தபிறகு அவரைக் கவனித்தால் உடற்சோர்வுடன் இருப்பதைக் காணலாம்; கருவுயிர்த்த இளம் நங்கைபோல் காணப்பெறுவார். ஏராளமான கணக்குகளை வீட்டில் செய்தேன். பல்கலைக் கழக வினாக்களை (பத்து ஆண்டுக்குரியவை) தனிகுறிப்பேடு களில் செய்தேன். அந்தக் காலத்தில் ஒரு குயர் குறிப்பேடுவழுவழுப்பான தாள்களால் கட்டப்பெற்றது--இரண்டனா (இப்போதைய 12 காசு) தான். இரண்டாண்டுகளில் 25 குறிப்பேடுகளில் பல்கலைக்கழக வினாக்களை வரையறுத்து வைத்திருந்தேன். வடிவகணிதத்தை யார் கற்பித்தார் என்பது இப்போது நினைவில் இல்லை. தேற்றங்களை Ởheorems) மட்டிலும் நன்கு கற்பித்தார். கடாத்தீர்வு களை நன்கு செய்துகாட்டவில்லை. பொதுவாக இவர் பெயர் கூட நினைக்க முடியாத நிலைக்குக் காரணம் இவர் நன்கு கற்பிக்காமையே. கணித பாடங்களில் ஆசிரியர் சரியாக அமையாவிடில் மாணாக்கர்கள் பிற்போக்காளர்களாகிவிடுவர் என்பது என் அநுபவத்தில் கண்ட மாபெரும் உண்மையாகும். பேராசிரியர் சீநிவாசன் கற்பித்த பாடங்களில் நூற்றுச்கு நூறு வாங்கி விடுவேன். மூன்று மணி நேரம் விடையிறுக்க வேண்டிய