பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிதம்......கற்பித்த முறை 291 வினாக்களை இரண்டரை மணி நேரத்தில் செய்து முடித்து விடுவேன். ஒரு கல்லூரியில் மாணாக்கர் கணிதத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அதற்குக் காரணம் சரியாகக் கற்பிக்கப் பெறவில்லை என்று பொதுவாகக் கூறிவிடலாம். இயற்பியல் : இப்பாடத்தைக் கற்பித்தவர் காம்பெர்ட் என்ற ஒரு ஃபிரெஞ்சு சாமியார். உரைக்கப்படும் பொருள் உள்ளத்தில் அமைத்துக் கொண்டு கொள்வோன் கொள்வகைக் கோடல் மரபு இவரிடம் அமையவில்லை. இவர் வகுப்பில் மாணாக்கர்களின் சராசரி மதிப்பெண் 15க்குக் கீழ்தான்; நான் முதல் ஆண்டு மூன்று தேர்வுகளிலும் இருபது விழுக்காட்டிற்கு மேல் வாங்கவில்லை. வகுப்பில் ஒருவர் இருவர்கூட முப்பது விழுக்காடு வாங்கியதாக நினைவு இல்லை. பேசும் ஆங்கிலம் ஒருவருக்கும் புரியவதில்லை. செய்முறைகளைச் சோதனைச் சாலைகளில் விளக்குவது இன்னும் மோசம். இளம் வயதுடைய பயிற்சி அளிப்பவர்கள்செய்து காட்டுபவர்கள் (Demonstrators) - வருவார்கள்; அவர்கள் நன்கு விளக்குவார்கள். உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வீடுசென்று மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் இருக்கும்; ஒரு சிலரிடம்தான் இந்த ஆவல் காணப் பெறும். வீட்டிற்குச் சென்று முன்கூட்டிய தெரிந்துவரலாம். விடைத்தாள்களைத் திருத்தும்போதுகூட பக்கத்தில் மாணாக்கனை வைத்துக் கொண்டு திருத்துவதும் உண்டு. இம்மாதிரியான பழக்கத்தில் ஒரு முறை காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களைத் தெரிந்து கொள்வதற்கு சாமியார்கள் தங்கியிருக்கும் விடுதிக்குச் சென்று காம்பெர்ட் சாமியார் அறைக்குள் விடுவிடு' என்று நுழைந்து விட்டேன். இப் பழக்கத்தைச் சாமியார் விரும்பவில்லை. இப்பழக்கம் நற் பழக்கம் அன்று என்பதைக் கூறி நற்பழக்கத்தை நாடகம்