பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 நினைவுக் குமிழிகள்-1 போல் நடத்திக் காட்டினார். தாம் ஃபிரெஞ்சுத் தொனி யுடன் ஆங்கிலம் பேசுவது பெரும்பான்மையான மாணாக்கர் கட்குப் புரியவில்லை என்பதைச் சாமியார் நன்கு உணர்ந் திருந்தார். அடுத்த பிரிவிலுள்ள மாணாக்கர்கள் இயற்பியலில் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்ததையும் தம் பிரிவிலுள்ள மாணாக்கர்கள் அங்ங்ணம் பெறாமையும் இந்த உணாவுக்குக் காரணமாக இருக்கலாம். இப்போது அறையில் அநுமதியின்றிப் புகுந்தது தவறு என்பதைக் காட்டிய முறை இன்றும் என் மனதில் பசுமை யாக உள்ளது. என்னைக் கழுத்தில் தம் இடக்கையைப் போட்ட வண்ணம் (பாட்டன் பேரன் கழுத்தில் போடுவது போல்) வெளியில் இட்டுச் சென்றார். என்னை வெளியில் விட்டுக் கதவை சாத்தினார். தாம் இருக்கையில் அமர்ந்த பிறகுக் கதவை மெதுவாகத் தட்டுமாறு (Tap the door) பணித்தார். நான் அவ்வாறு செய்தேன், உள்ளே வருமாறு பணித்தார் (Come in). உள்ளே வந்து காலை வணக்கம் ஃபாதர்' என்றேன். என்ன வேண்டும்?' (What do you want) என்றார். மதிப்பெண்கள் தெரிய வேண்டும் என்றேன். மதிப்பெண் பட்டியலை எடுத்துப் பார்த்தார். நான் பெற்றிருந்த குறைவான மதிப்பெண்ணைச் சொன்னார். "எல்லோரும் நன்றாக விடை எழுதவில்லை. என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து வருகிறேன். எல்லோருமே சரியாக எழுதாததால் இப்பிரிவு மாணவர்கள் மட்டம்’ என்ற முடிவுக்கு வர முடியாது' என்றார். "இனி இப்படித்தான் எல்லோரிடமும் எங்கும் நடந்து கொள்ள வேண்டும். எங்கும் ப ார் க் க வேண்டியவர்களின் செவ்வியறிந்து இங்கிதமாக நடந்து கொள்ள வேண்டும். புனித சூசையப்பர் கல்லூரியில் படித்தவன் என்பதை உன் நடத்தை காட்டவேண்டும்' என்று சொல்லி என்னை இன் முகத்துடன் விடை கொடுத்தனுப்பினார். கார்ட்டி சாமியார்,