பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிதம்......கற்பித்த முறை 293 எராட் சாமியார் இப்படித்தான் அன்பாக இருப்பார்கள் என்று அவர்களிடம் படித்த மாணாக்கர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். நான் புனித சூசையப்பர் கல்லூரியில் பயின்ற ஐந்தாண்டு களில் (1934-39) முதலாண்டு வீ சாமியார் முதல்வர். அடுத்த நான்கு ஆண்டுகள் ஜெரோம் சாமியார் முதல்வராக இருந்தார். இவர் பதவியேற்றவுடன் கல்லூரி நிர்வாகத்தில் பல மாறுதல்களைச் செய்தார். பேராசிரியருக்கு இயல்பாக அமைந்திருக்க .ே வ ண் டி ய பண்புகளும் முதல்வருக்கு அமைந்திருக்க வேண்டிய திறனும் வாய்க்கப் பெற்றவர். முதலாவதாக, இடைநிலை வ கு ப் பு இரண்டாவது ஆண்டில் பி. பிரிவில் காம்பர்ட் சாமியாருக்குப் பதிலாகத் திரு சவரிமுத்து என்றவரை இயற்பியல் கற்பிப்பதற்கு நியமித்தார். திரு. சவரிமுத்து பி.ஏ. ஆனர்ஸ் வகுப்பில் சிறந்த மாணாக்கராக இருந்து நல்ல மதிப்பெண் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று அப்பொழுதுதான் வெளிவந்தவர். மாணாக்கராக இருந்தபோதே கற்பிற்கும் திறன் கருவில் அமைந்தவர் என்பதை நேரில் கண்டவர் ஜெரோம் சாமியார்; அவருக்குக் கற்பித்தப் பேராசிரியர் களையும் வினவி அறிந்திருக்க வேண்டும். திரு. சவரிமுத்து வகுப்பின் நிலையை நன்கு புரிந்து கொண்டுதான் தம் வேலையைத் தொடங்கினார். முதல்வர் ஜெரோம் சாமியார் இவர் பணியை ஏற்றுக் கொள்வதற்கு முன் இந்த வகுப்பின் நிலையை நன்கு விளக்கியிருக்க வேண்டும். மாணாக்கர்கள் மூலமும் நிலைமையை நன்கு தெரிந்து கொண்டிருக்க வேண்டும். புனித சூசையப்பர் கல்லூரியில் நான் பயின்ற அந்த நாட்களில் புதன், ஞாயிறு வாரவிடுமுறை, இரண்டு நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளித்தால் அந்த வாரத்தில் நடந்த பாடங்களை மாணாக்கர் மறந்து விடுவர் என்றும், இரண்டு நாட்கள்