பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 நினைவுக் குமிழிகள்-1 தொடர்ந்து விடுமுறை கிடைத்தால் சிற்றுார்களிலிருந்து வந்து பயிலும் மாணாக்கர்கள் அதனை ஊர்சுற்றப்இடக்கரடக்காகச் சொன்னால் சுற்றுலாவுக்கு’ப்-பயன் படுத்திக் கொள்வார்கள் என்றும் இந்த முறையை மேற் கொண்டனர் போலும். உளவியல் தத்துவப்படி இது மறதிக்குத் துணை செய்யும் என்றும் கருதியிருக்கலாம்! திரு. சவரிமுத்து இயற்பியலில் முதலாண்டு நடந்த வற்றை மீண்டும் அடியைப் பிடிடா, பாரதபட்டா என்பது போல் புதன் காலையும் மாலையும் கற்பித்தார். பாடங்கள் நாலுகால் பாய்ச்சலில் செல்லவில்லை: நிதானமாக மாணக்கர் உளம்கொள்ளும் வகையில் அற்புதமாக நடத்தி னார். அவர்தம் இனிமையான குரல் இன்றும் என்காதுகளில் ஒலிப்பதுபோல் உள்ளது; புன்முறுவல் பூத்த முகமும் முத்துக்கோத்தாற் போல் அவர் கரும்பலகையில் எழுதும் பாங்கும் இன்றும் எனக்கு மானசீகமாகக் காட்சியளிக்கின்றன. உயர் நிலைப் பள்ளியில் சார்லஸ் பாயில் விதிபற்றிய, FV - Pıvı Т l என்ற சமன்பாடு, முகம் வீங்கும் அளவு அடிபட்டும் திரு. டி.கே. இராமநாத பிள்ளையால் விளக்க முடியாமல் குருட்டுப்பாடமாகக் கொண்டிருந்த கருத்து இப்போது தெளிவாகியது. இவர் விளக்கிய முறை: = LoffAprÆgy (Constant) -ਜੂ- = மாறாதது р -슈- = மாறாதது