பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிதம்...... கற்பித்த முறை 295 அதாவது அமுக்கம், பரிமாணம், வெப்பம் இவற்றின் நிலைகள் மாறினாலும் அவற்றின் பெருக்குத் தொகை மாறாதிருக்கும். ஆகவே, PV = PıWı = P2V2 – P3V3 T + = Ts -: T., = மாறாதது என்றாகின்றன என்பதைத் தெளிவாக்கினார். இயக்கவகையியல் (Dynamics), நிலைபொருளியல் (Statics) என்ற பகுதிகளில் வாய்பாடுகளும் கணக்குகளும் அதிகம். இப்பகுதிகளை மிக அற்புதமாக நடத்தி எங்கட்கு நல்ல தெளிவை ஏற்படுத்தினார் வெப்பம், ஒளி, காந்தம் ஒலி பகுதிகள் மிக நன்றாக விளக்கப்பெற்றன. இப்பகுதி களிலுள்ள கணக்குகளைச் செய்வதிலும் நல்ல ஆர்வ மூட்டினார். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இப்பகுதி களில் சிறு தேர்வுகள் வைப்பார். உடனுக்குடனே திருத்தி மதிப் பெண்களை அறிவிப்பார். வகுப்புகளில் உற்சாகக் களை தட்டியது; ஆர்வ அலை பொங்கி வழிந்தது. எல்லோரும் நல்ல மதிப்பெண்கள் பெற்றனர். இரண்டாவது ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முதலாண்டுப்பாடங்களை முடித்துவிட்டார். முறையான வார வகுப்புகளில் இரண்டாவது ஆண்டுப் பகுதிகள் நன்கு கற்பிக்கப் பெற்றன. 10% அல்லது 15%வரை மதிப் பெண்கள் பெற்ற நான் திரு சவரிமுத்து வந்த பிறகு 85%, 90% என்று பெறமுடிந்தது. வகுப்பின் சராசரி மதிப் பெண் நிலையே 60% 70% என வளர்ந்தது. இங்ங்னம் இடைநிலை வகுப்பில் இயற்பியலுக்கு ஒரு நல்லாசிரியர் கிடைத்தமையால் இயற்பியலை ஆர்வமாகவும் அக்கறையு டனும் கற்க முடிந்தது. ஒராண்டு நோய் வாய்ப்பட்டு தேய்ந்த உடல், சத்துணவுகளால் தேறுவது போன்ற ஒரு நிலையை வகுப்பிலுள்ள எல்லோருமே உணர்ந்தோம்.