பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 நினைவுக் குமிழிகள்-1 வேதியியல் : இதற்குப் பேராசிரியராக அமைந்தவர் திரு. கோவிந்தராவ் என்பவர்; இவர் இளங்கலைப் பட்ட தாரியே, வேதியியலில் தொடக்கக் காலத்தில் தனிமங்களின் குறியீடுகள். இயைபியல், அணு ஆற்றல், அலகு எண், (Valency) வேதியியற் பொருள்களின் குறியீடுகள், வேதியியல் சமன்பாடுகள் ஆகியவற்றில் நல்ல அடிப்படை அமைய வேண்டும். குழந்தை மொழியை பேச, எழுதக் கற்றுக் கொள் வதில் அடையும் சிரமங்கள் எல்லாம் புதியதொரு மொழி யாகிய வேதியியல் மொழியைக் கற்றுக் கொள்வதில் வேதியியல் பாடம் பயில்வோர் அடைய நேரிடும். பொறுமையாக ஆர்வத்துடன் தொடக்கத்தில் கற்றுக் கொண்டால் வேதியியல் பாடத்தை ஊதித்தள்ளி விடலாம்' இந்த நுட்பத்தை நன்கு அறிந்தவர் திரு கோவிந்தராவ். ஒவ்வொரு நாளும் புதிய பாடத்தைக் கற்பிக்கத் தொடங்கும் முன் மாணாக்கர்களின் முன்னறிவுத்திரளையைத் (Appereceptive mass) தட்டி எழுப்புவார். இதனால் பாடங்களின் இடையறாத தொடர்பு ஏற்பட்டுக் கற்போரின் மனத்தில் தெளிவுடன் ஆழப்பதிவதற்கும் ஆர்வம் ஏற்படு வதற்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இயற்பியலைப்போல் வேதியியலில் அதிகக் கணக்குகள் செய்ய வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும் இந்தக் குறைந்த அளவு கணக்குகளைப் பிழையின்றிச் செய்யத் தெளிவு பிறக்கும்படி செய்துவிடுவார் திரு கோவிந்தராவ். இதனால் எனக்கு வேதியியலில் நல்ல ஆழமான அறிவு ஏற்பட்டு அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும் வாய்ப்பு உண்டாயிற்று. இளங்கலைப் பட்டப் படிப்பிலும் (B.Sc) வேதியியலை முக்கிய பாடமாகவும், கணிதம் இயற்பியல் இவற்றைத் துணைப் பாடங்களாகவும் (Subsidiaries) எடுத்துக்கொண்டு படிக்கும்.நிலையும் ஏற்பட்டது.