பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 நினைவுக் குமிழிகள்-1 குறித்துக் கொள்ள வேண்டிய குறிப்புகள் ஒன்றும் இரா. இடைநிலை வகுப்புகளில் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டியது கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் தான், இந்த மூன்று பாடங்களிலும் தேர்வுகளில் பாடத்திற்கு இரண்டாக ஆறு வினாத்தாள்கட்கு விடையிறுக்க வேண்டும். இதனை நன்கு அறிந்து நான் என் யுக்திக் கேற்றவாறு மேற் கொண்ட முறையைக் குறிப்பிடுவது பொருத்தமாகும்: இக்கால மாணாக்கர்கட்கு ஒருவகையான வழிகாட்டியாகவும் அமையலாம். ஃபூல்ஸ்கேப் அளவில் இரண்டு தொளைக வளிட்டு நாடாவைக் (Lace) கொண்டு கட்டும் முறையில் ஏழு கோப்புகள் தயார் செய்து கொண்டேன். இவற்றுள் ஒன்று முழுவதும் கள்ளிக்கோட்டைத் (Calico) துணியாலானது,இது வகுப்பிற்கு எடுத்துச் செல்லவேண்டிய கோப்பு. ஏனைய ஆறும் அடிப்பக்க விளிம்பில் தொளைப் பகுதி மட்டிலும் இத்துணியா லாகியது; மீதிப் பகுதி வண்ணத்தாளால் ஒட்டப்பட்டது. அப்பொழுது ஒரு குயர்தாள் ஒன்றரை அணாவுக்கு (நல்ல தாள் இரண்டனாவுக்கு = 12 காசு) கிடைக்கும். இத்தாள் களை ஃபூல்ஸ்கேப் அளவில் வட்டிக் கோப்புகளில் போடு வதற்கேற்பத் தொளையிட்டு வைத்துக் கொண்டேன். தொளையிடும் சாதனம் ஒன்றை (ஒற்றைத் தொளை யிடுவது) வாங்கி வைத்துக் கொண்டேன். 1934 ஜுனில் ரூ3;க்கு வாங்கிய இச்சாதனம் இன்றும் (1988) என்னிடம் பயன்பட்டுவருகின்றது. ஒருநாளுக்குத் தேவையான தாள்களை வகுப்பிற்கு எடுத்துச் செல்லும் கோப்பில் கோத்துக் கொள்வேன். தேதி போட்டு எழுதும் பழக்கத்தை மாணாக்கப்பருவத்திலிருந்து இன்று வரை (72-வயது) கடைப் பிடித்துவருகின்றேன். மேற் குறிப்பிட்ட மூன்று பாட (கணிதம், இயற்பியல், வேதியியல்) வகுப்புகளிலும் ஆசிரியர் தரும் குறிப்புகள், கரும்பலகையில் அவர் எழுதும் குறிப்புகள் இவற்றைத் தக்கவாறு அழகாக