பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூரியில் பயிலும்போது என் பழக்கங்கள் 299 கோப்பில் உள்ள தாள்களில் குறித்துக் கொள்வேன். ஒவ் வொரு வகுப்பிற்குப் போகும்போதும் பாடம், தேதி இவற் றைக் குறித்துக் கொண்டபிறகுதான் குறிப்புகளைத் தாளில் குறிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். மாலை அறைக்குத் திரும்பியதும் ஒவ்வொருபாடத்திலும் அந்தந்த வினாத்தாளுக்குரிய பகுதிகளை வரிசைதவறாமல் எடுத்துக் கோத்து வைத்துக் கொள்வேன், இபபணியைத் தவறாமல் செய்துவருவேன். தேர்வுக் காலங்களில் பாடங்களைத் திருப்பிப் படிக்கும்போது, வகுப்பில் ஆசிரியர் கற்பித்த காட்சிகள் நாடாப்பதிவு செய்து தொலைக் காட்சியிலோ வானொலியிலோ மானசீகமாகப் பார்ப்பது போன்ற அல்லது கேட்பது போன்ற அநுபவ நிலை ஏற்பட்டுப் பாடங்கள் மனத் தில் ஆழப் பதியவும் அவை தேவைப்படுங்கால் வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் ஏற்படும். வீட்டு-வேலை : ஆங்கிலம், தமிழ்ப்பாடங்களில் முதல் நாள் வகுப்புகளில் நடைபெற்ற பாடங்களைப் படித்துக் கொண்டும், புதிதாகத் தொடங்க வேண்டிய பகுதிகளை அகராதிகள், குறிப்புநூல்கள் (Notes) இவற்றின் துணை கொண்டு முன் கூட்டியே படித்துக் கொண்டும் செல்வதை ஒரு முக்கிய பழக்கமாகவே மேற் கொண்டிருந்தேன். இதனால் இந்தப் மொழிப் பாடங்களைப் புரிந்து கொண்டு மனத்தில் நிலை நிறுத்துவது எளிதாக இருந்தது. இந்தப் பாடங்களில் எனக்கு எவ்வித சிரமமும் ஏற்படவில்லை. கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில்தான் அதிகம் உழைக்க வேண்டியிருந்தது. ஓர் ஐந்தாண்டுகள் மார்ச்சு-செப்டம்பர் திங்களில் நடைபெற்ற தேர்வுகளின் வினாத்தாள்களை மூன்று தனித்தனிக் குறிப்பேடுகளில் படியெடுத்து வைத்துக் கொள்வேன். கல்லூரியில் ஒவ்வொரு பாடத்திலும் பகுதிகள் கற்பிக்கப்பெற்று வரும்பொழுதே