பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 நினைவுக் குமிழிகள்-1 அப்பகுதிகளில் பல்கலைக்கழகத் தேர்வுகளில் விடுக்கப் பெற்ற வினாக்களை நோக்கி மனத்திற்குள்ளேயே விடை யிறுக்கும் முறைகளைப் பயிற்சி தந்து கொள்வேன். அப்பகுதிகளில் கேட்கப்பெற்றுள்ள வாய்பாடுகளைப் (Formulas) பிறப்பிக்கும் முறைகளை அடிக்கடி எழுதிப் பார்த்துக் கொள்வேன்; பெரிய வினாக்களுக்கு விடை காணும் முறைகளிலும் மனத்திற்கு அவ்வப்பொழுது பயிற்சிகள் தந்த வண்ணம் இருப்பேன். இயற்பியல், வேதியியல்களில் கேட்கப்பெற்றிருக்கும் கணக்குகளைச் செய்து பார்ப்பேன். இவ்வாறு செய்தவற்றை அந்தந்தக் கோப்புக்ளில் உரிய இடங்களில் 'வீட்டு - வேலை" என்று குறிப்பிட்டு இணைத்துக் கொள்வேன். தேர்வுக் காலங்களில் பாடங்களைத் திருப்பும்போது இவை சஞ்சீவிபோல் நின்று தேர்வுகட்கு வழியமைத்துக் காட்டும். கணித பாடத்தில்தான் ஏராளமான கணக்குகள் செய்தேன். வடிவகணிதம், இயற்கணிதம், கோண கணிதம் இவற்றிற்கெனத் தனித்தனியான குறிப்பேடுகள் வைத் திருந்தேன். இவற்றைப் பாடநூல் பயிற்சிகள், தேர்வுத் தாள் விடைகள் எனப் பிரித்து வைத்துக் கொண்டு கணக்குகள் செய்தேன். அந்தக் காலத்தில் வழுவழுப்பான யானைப் பொறிப்பு, மூங்கில் பொறிப்பு போடப் பெற்றுள்ள காகிதத்தாலான குறிப்பேடுகள் மிக்க மலிவான விலைக்குக் கிடைக்கும். ஒரு குயர் குறிப்பேடு இரண்டனாத் தான் (பன்னிரெண்டு காசு), இடைநிலை வகுப்பில் இருந்தபோது இரண்டாண்டுகளில் வீட்டுவேலை செய்த குறிப்பேடுகள் இருபதிற்கு மேலிருக்கும். இவற்றைத் தெய்வம்' எனப் போற்றினேன். தேர்வுக் காலத்தில் இவற்றைத் திருப்பிப் பார்த்துக் கொண்டு சென்றால் தேர்வு களில் 100க்கு 100 பெற முடியும், மிகச் சிக்கலான கணக்குகளை (பாடநூல் பயிற்சிகளாயிருப்பினும், பல்கலைக்